தாடி பாலாஜி இல்லை.. கேடி பாலாஜி.. செம பில்டப் உடன் வரும் பிக் பாஸ் அல்டிமேட்டின் 6வது போட்டியாளார்!

சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 6வது போட்டியாளராக தாடி பாலாஜி வருகிறார் என அதிகாரப்பூர்வ புரோமோவை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தற்போது வெளியிட்டுள்ளது.

பழசை மறக்கல என தலையில் ஹெல்மெட் உடன் இருக்கும் தாடி பாலாஜியின் புரமோ மற்றும் ஐஸ்வர்யா தத்தா அவரது தலையில் குப்பைக் கொட்டிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தாடி பாலாஜி புரமோவை எல்லாம் நாங்க எதிர்பார்க்கவே இல்லை வேறு போட்டியாளர் புரமோவை போடுங்க என ரசிகர்கள் கடுப்பாகி வருகின்றனர்.

இவர் தான் 6வது போட்டியாளர்

இவர் தான் 6வது போட்டியாளர்

க்ளூ கொடுத்த போதே ரசிகர்கள் தாடி பாலாஜி தான் 6வது போட்டியாளர் என கண்டு பிடித்துவிட்டனர். இந்நிலையில், தற்போது தாடி பாலாஜியின் அறிவிப்பு புரமோ வெளியாகி உள்ளது. இவரும் விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக பல ஆண்டுகாலம் குப்பைக் கொட்டி வருகிறார். பிக் பாஸ் சீசன் 2வுக்கு பிறகு தற்போது பிக் பாஸ் அல்டிமேட்டில் யாராவது குப்பை கொட்டி விடுவார்களோ என்கிற அச்சத்திலே நுழைகிறார்.

ஐஸ்வர்யா தத்தா வரல

ஐஸ்வர்யா தத்தா வரல

நல்லவேளை ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அந்த தைரியத்தில் தான் தாடி பாலாஜி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கே ஓகே சொல்லி இருப்பார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஆனால், வனிதா விஜயகுமார், சுரேஷ் தாத்தாலாம் பாலாஜியை சும்மா விடுவாங்களா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கேடி பாலாஜி

கேடி பாலாஜி

நான் இப்போ தாடி பாலாஜி இல்லை.. கேடி பாலாஜி என வீர வசனம் எல்லாம் புரமோவுக்காக பேசி உள்ளே வரும் இவர் ஒரு வாரமாவது தாக்குப்பிடிப்பாரா? என்றே பிக் பாஸ் ரசிகர்கள் ட்ரோல் செய்து ஏகப்பட்ட மீம் குப்பைகளை தாடி பாலாஜி புரமோவில் கொட்டி வருகின்றனர். மறுபடியும் வாங்குறதுக்கு வருகிறார் பாலாஜி என்றும் பங்கம் செய்து வருகின்றனர்.

முதல் எலிமினேஷன்

முதல் எலிமினேஷன்

பிக் பாஸ் அல்டிமேட்டில் முதல் வாரமே எலிமினேட் ஆவதற்கு ஒரு பலியாடு தேவை தானே.. அதற்குத்தான் தாடி பாலாஜி வருகிறார் என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். ஆனால், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் சொல்வது போல யார் எப்போ போவார் என்பது பிக் பாஸ் டீமுக்குத் தான் வெளிச்சம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X