இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பிக் பாஸ் ரசிகா! இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி எத்தனை நாட்கள் தெரியுமா?

சென்னை: கொரோனா காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி வெறும் 80 நாட்களாக குறைக்கப்படுகிறது என கிளம்பிய வதந்திகளுக்கு சூப்பரான முற்றுப்புள்ளியை ஹாட்ஸ்டார் வைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

நாட்களும் அந்த அந்த மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடுவது வழக்கம்.

கடுப்பேற்றிய வதந்தி

கடுப்பேற்றிய வதந்தி

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக போட்டியாளர்கள் குறித்தும், அந்த நிகழ்ச்சி குறித்தும் ஏகப்பட்ட உண்மைகளும், வதந்திகளும் கலந்தே சமூக வலைதளங்களில் உலாவும். அதை பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்களும் விரும்பியே பரப்புகின்றனர். இதில், இம்முறை ரசிகர்களை மிகவும் கடுப்பேற்றிய வதந்தி என்றால், அது பிக் பாஸ் தமிழ் சீசன் 4 வெறும் 80 நாட்கள் மட்டுமே என்பது தான்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிக் பாஸ் ரசிகா

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிக் பாஸ் ரசிகா

பிக் பாஸ் தொடர்பான அறிவிப்புகள் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது ஹாட் ஸ்டாரின் ட்விட்டர் பக்கத்தில் அசத்தலான ஒரு ட்வீட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பிக் பாஸ் ரசிகா என்ற கேப்ஷனுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி எத்தனை நாட்கள் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

ராசி பலன் டிசைனில்

ராசி பலன் டிசைனில்

அதுவும் சாதாரணமாக அல்லாமல் வித்தியாசமாக தினசரி ராசி பலன் ஸ்டைலில் அந்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் என ஒவ்வொரு ராசி பெட்டிக்குள்ளும், ஒரே மாதிரியான விஷயம் கூறப்பட்டு இருக்கிறது. இந்த 4 ராசிகளுக்கு மட்டுமல்ல, 12 ராசிகளுக்கும் இனி இதே ராசி பலன் தானாம்.

எத்தனை நாட்கள்

எத்தனை நாட்கள்

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த கொரோனா காலத்திலும் 117 நாட்கள் நடைபெற உள்ள நிலையில், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை மட்டும் எப்படி 80 நாட்களுக்குள் முடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில், தற்போது 105 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் என்ற மாஸ் அப்டேட் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

என்ன பலன்

என்ன பலன்

காத்திருந்த மகிழ்ச்சி கதவைத் தட்டும், 105 நாட்களுக்கு அன்லிமிடெட் ஃபன் அனுபவிப்பீர்கள். எதிர்பாராத அதிகாரம் கைக்கு வரும். வோட்டு போட்டு காரியம் சாதிப்பீர்கள். காரிய சித்தி ஆரம்பம் இன்னும் 1 நாளில்! என்கிற சூப்பரான ராசி பலன் தான் அடுத்த 105 நாட்களுக்கு எல்லா ராசிக்காரர்களுக்கும் என்கிற ட்வீட்டை ஹாட் ஸ்டார் தற்போது வெளியிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X