குற்றம் சாட்டப்படும் கலை.. உண்மையை சொன்ன அபி.. கனா காணும் காலங்கள் தொடரில் அதிரடி!

சென்னை : ரசிகர்களை தங்களின் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களுக்கு அழைத்து சென்ற தொடர் கனா காணும் காலங்கள்.

இந்தத் தொடர் 4 சீசன்களை கடந்து தற்போது 5வது சீசன் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

தங்களுக்கு பிடித்தமான இந்த தொடருக்கு தற்போதும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

விஜய் டிவியின் மாஸ் தொடர்

விஜய் டிவியின் மாஸ் தொடர்

2006 முதல் 2013 வரை விஜய் டிவியின் மாஸ் தொடராக இருந்தது கனா காணும் காலங்கள். இந்தத் தொடர் பள்ளி பருவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. அதற்கேற்றாற்போல இந்தத் தொடருக்கு அதிகமாக பள்ளி, கல்லூரி மாணவர்களே அதிகமாக ரசிகர்களாக இருந்தனர்.

மாணவர்களை வீட்டில் கட்டிப்போட்ட தொடர்

மாணவர்களை வீட்டில் கட்டிப்போட்ட தொடர்

தினமும் சீரியல் நேரம் வந்துவிட்டால் அவர்களை வீட்டில் மட்டுமே பார்க்க முடியும். அந்த அந்த அளவிற்கு இந்த தொடர் மாணவர்களை அதிகமாக கட்டிப் போட்டது. பெரியவர்களும் தங்களது பள்ளிக் காலங்களுக்கு செல்லும் அனுபவத்தை இந்தத் தொடர் மூலம் பெற்றனர். தொடரில் நடித்த ஜோ, ராகவி, சங்கவி, பாண்டி உள்ளிட்ட கேரக்டர்கள் ரசிகர்களின் நினைவில் நீங்காத இடம் பெற்றவை.

நான்கு சீசன்கள்

நான்கு சீசன்கள்

ராகவி, இர்பான், பிளாக் பாண்டி, பிருந்தா தாஸ், குயிலி உள்ளிட்டவர்களுக்கு அடுத்த லெவலுக்கு அவர்களது கேரியர் நகர்ந்தது. இர்பான் 3 படங்களில் நடித்தார். இந்தத் தொடரின் வரவேற்பு தொடர்ந்து அடுத்ததாக கனா காணும் காலங்கள் சீசன் 2, கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை, கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என 4 சீசன்களை இந்த தொடர் கடந்துள்ளது.

வெப் தொடர்

வெப் தொடர்

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஏப்ரல் 22 முதல் இந்தத் தொடரில் அடுத்த சீசன் தற்போது வெப் தொடர் வடிவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. அங்கும் இந்தத் தொடர் தற்போது முதலிடத்தில் உள்ளது. தீபிகா, ராஜா, வெற்றி, பிரபு என புதுமுக நடிகர்கள் மாணவர்களாக நடித்து வருகின்றனர்.

மீண்டும் இர்பான்

மீண்டும் இர்பான்

நடிகர் ராஜேஷ் பள்ளி நிறுவனர் சக்திவேலாகவும் பிடி மாஸ்டராக ராஜ்மோகனும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் முதல் சீசனில் மாணவராக நடித்திருந்த இர்பான் தற்போது சீரியலில் ஆசிரியராக களமிறங்கியுள்ளார். ஜெர்ரி என்ற இந்த கேரக்டர் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.

சக மாணவியை மிரட்டும் ஆதி

சக மாணவியை மிரட்டும் ஆதி

தற்போது இந்த தொடரின் ப்ரமோவை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சக மாணவியான அபியை காதலிக்க வற்புறுத்தி புகைப்படத்தை காட்டி மிரட்டுகிறான் ஆதி. இதை கண்டிக்கும் கலை, அவனை அடித்து விடுகிறான். இதனால் அவனை பள்ளியிலிருந்து வெளியேற்ற அனைவரும் கூறுகின்றனர்.

புதிய ப்ரமோ வெளியீடு

புதிய ப்ரமோ வெளியீடு

இதையடுத்து அங்குவரும் அபி, உண்மையை கூற, தற்போது அனைவரின் கோபமும் ஆதி பக்கம் திரும்புகிறது. அவனை போலீசில் பிடித்துக் கொடுத்த அனைவரும் ஆத்திரத்துடன் கூற, அவனை பிடித்து இழுத்து செல்கின்றனர். தொடர்ந்து அவன் கலையை ஆத்திரத்துடன் பார்ப்பதாக ப்ரமோ காணப்படுகிறது.

விறுவிறுப்பான காட்சிகள்

விறுவிறுப்பான காட்சிகள்

கனா காணும் காலங்கள் தொடர் 4 சீசன்களை விஜய் டிவியில் கடந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்தத் தொடர் வெப் சீரிசாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது தொடரின் புதிய ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் விறுவிறுப்பான காட்சிகளுடன் இந்த ப்ரமோ காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X