twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஃப்ரோஸன் 2வில் மேஜிக்கை தாண்டி ஒரு சூப்பர் விஷயமும் இருக்காம்!

    |

    Recommended Video

    Frozen 2 | Dubbing | Official Trailer 2| Sruthi Hassan | DD

    லாஸ் ஏஞ்சல்ஸ்: டிஸ்னியின் பிரம்மாண்ட படைப்பான ஃப்ரோஸன் 2 படம் வரும் நவம்பர் 22ம் தேதி திரைக்கு வருகிறது.

    உலகம் முழுவதும் வெளியாகவுள்ள ஃப்ரோஸன் 2 திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

    ஃப்ரோஸன் 2 தமிழ் வெர்ஷனுக்கு ஷ்ருதி ஹாசன் மற்றும் திவ்ய தர்ஷினி குரல் கொடுத்துள்ளனர்.

    புது கணவருடன் அப்டி இப்டி.. சீரியல் நடிகையின் வைரல் வீடியோ.. நெட்டிசன்ஸ் கேட்ட 'அந்த' கேள்வி!புது கணவருடன் அப்டி இப்டி.. சீரியல் நடிகையின் வைரல் வீடியோ.. நெட்டிசன்ஸ் கேட்ட 'அந்த' கேள்வி!

    ஃப்ரோஸன் 2

    ஃப்ரோஸன் 2

    எல்சா மற்றும் ஆன்னாவின் மாயாஜால உலகத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருகிறது ஃப்ரோஸன் 2. 2013ம் ஆண்டு வெளியான ஃப்ரோஸன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படத்தை ஜெனிஃபர் லீ மற்றும் க்றிஸ் பக் இணைந்து இயக்கியுள்ளனர்.

    தமிழில்

    இந்தியாவில் 4 மொழிகளில் ஃப்ரோஸன் 2 படம் இந்த வார வெள்ளிக்கிழமை வெளியாகிறது. எல்சா கதாபாத்திரத்திற்கு ஷ்ருதி ஹாசனும் ஆன்னா கதாபாத்திரத்திற்கு டிடி எனும் திவ்ய தர்ஷினியும் குரல் கொடுத்துள்ளனர். காமெடி கதாபாத்திரமான ஒலாஃபோ கதாபாத்திரத்திற்கு சத்தியன் குரல் கொடுத்துள்ளார். இசைக் காவியமாக உருவாகியுள்ள ஃப்ரோஸன் 2 படத்திற்கு பாடல்களையும், வசனத்தையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

    சூப்பர் விஷயம்

    சூப்பர் விஷயம்

    ஃப்ரோஸன் படம் புராணம் மற்றும் கற்பனை கதை கலந்து உருவாக்கப்பட்டுள்ள மேஜிக்கல் அனிமேஷன் படம். இந்த படத்தின் நாயகி எல்சாவுக்கு தொட்டதை எல்லாம் பனியாக உறைய வைக்கும் அதிசய சக்தி இருக்கிறது. ஃப்ரோஸன் படத்தில் அனைவரையும் விட சக்தியானவளாக எல்சாவை வடிவமைத்த இயக்குநர் ஜெனிஃபர் லீ, இரண்டாம் பாகத்தில், எல்சாவை விட இயற்கை தான் வலிமையானது என்பதையும், பருவ மாற்ற பிரச்சனைகள் குறித்த விஷயத்தையும் திரைக்கதையில் சேர்த்துள்ளாராம்.

    ஃப்ரோஸன் பயணம்

    ஃப்ரோஸன் பயணம்

    ஃப்ரோஸன் இரண்டாம் பாகத்திற்கான கதையை தேடும் பயணத்தில் நார்வே நாட்டிற்கு சென்றிருந்த இயக்குநர் ஜெனிஃபர் லீ மற்றும் க்றிஸ் பக் தம்பதியினருக்கு, இரண்டாம் பாகத்தில் ஏதாவது ஒரு ஆழமான கருத்தை படத்தில் வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

    மேலும், இயல்பாகவே இயற்கையோடு சம்மந்தம் உள்ள ஃப்ரோஸன் கதையில், ஏன் இயற்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தக்கூடாது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பலனாக, நார்வே, ஐஸ்லாந்து, ஃபின்லாந்து, ஆர்க்டிக் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி இயற்கையின் முக்கியத்துவத்தை திரைக்கதையில் வடிவமைத்துள்ளார்களாம்.

    English summary
    Frozen 2 will not only take the story of princesses Anna and Elsa forward, but also tell a fantastical tale infused with an environmental message.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X