வீட்டில் இருந்தே.. வித விதமா விளம்பரம்.. டிவிக்கு முன் ஹீரோயின்கள்.. டிஸ்னியுடன் இணைந்த ஹாட்ஸ்டார்!

சென்னை: கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடிக் கிடக்கின்றன.

Recommended Video

Shruthi Hassan MakeUp Tutorial | Makeup | Quarantine

பொதுமக்களும் எந்த ஒரு சுற்றுலா தலங்களுக்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே ஊரடங்கு உத்தரவு காரணமாக முடங்கிக் கிடக்கின்றனர்.

மக்களின் ஒட்டுமொத்த பொழுதுபோக்காக தற்போது இருப்பது டிவி, கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் மட்டுமே.

அதை பயன்படுத்திக் கொள்ள ஹாட் ஸ்டாருடன் டிஸ்னி நிறுவனம் இன்று முதல் கைகோர்த்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இந்த சேவை கிடைக்கிறது.

டிஸ்னி + ஹாட்ஸ்டார்

ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளம் இன்றும் முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டாராக அதிகாரப்பூர்வமாக மாறியுள்ளது. டிஸ்னி தயாரிப்பில் வெளியான பிரம்மாண்ட ஹாலிவுட் படங்கள் மற்றும் டிஸ்னி படைப்புகள் எல்லாமே இனிமேல், ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளத்தின் மூலமாகவே கண்டு மகிழலாம். அதற்காக பிரத்யேக பிரீமியம் பிளான்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தூர்தர்ஷன் டு ஹாட்ஸ்டார்

தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ராமயணம் நிகழ்ச்சியை புரோமோட் செய்த நடிகை காஜல் அகர்வால், தற்போது, தனது வீட்டில் இருந்தபடியே டிவிக்கு முன் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் நேற்று இரவு ஒளிபரப்பப்பட்ட தி லயன் கிங் ப்ரீமியர் நிகழ்ச்சியை பார்த்து ரசித்த புகைப்படத்தை ஷேர் செய்து விளம்பர வேலையை தொடங்கி உள்ளார்.

வீட்டில் இருந்தே ரெட்கார்ப்பெட்

ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில், இந்தியாவின் முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் வீட்டில் இருந்தபடியே டிஸ்னி + ஹாட்ஸ்டார் ப்ரீமியம் ரெட்கார்ப்பெட்டில் கலந்து கொண்டனர். டிவிக்கு முன் ஹாட்ஸ்டாரில் படம் பார்த்தபடியே போட்டோ எடுத்து பதிவிட்டு விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

பாலிவுட்டில் இவர் தான்

டிஸ்னி படைப்பில் வெளியான ஃப்ரோஸன் 2 படத்தில் எல்சா கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்த பிரியங்கா சோப்ரா, இந்த விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக இந்த முறை அந்த வாய்ப்பை பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூர் தட்டிச் சென்றுள்ளர். மேலும், கத்ரீனா கைஃப், சோனம் கபூர், பர்ணீத்தி சோப்ரா, கீர்த்தி சனோன் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளும் இந்த ரெட்கார்ப்பெட்டில் பங்கேற்றுள்ளனர்.

இத்தனை அம்சங்கள்

டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி ப்ரீமியம் பெற ஆண்டுக்கு 1,499 ரூபாய் செலுத்த வேண்டும். இதில், டிஸ்னி, பிக்சார், ஸ்டார் வார்ஸ், மார்வெல், நேஷனல் ஜியோகிராபிக் என பல ஸ்பெஷல் அம்சங்களும், ஹெச்.பி.ஓ, ஃபாக்ஸ், ஷோடைம் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிக்க முடியும். கிட்ஸ் சேஃப் ஆப்ஷனும் இருக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X