வரலாறு படத்துக்காக அஜித் செய்த செயல் தெரியுமா?.. குட்டி ப்ளாஷ்பேக்

சென்னை: அஜித் நடித்து மெகா ஹிட்டான வரலாறு படத்துக்காக அவர் செய்திருக்கும் செயல் தெரியவந்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்களில் ஒருவர் அஜித். சமீபத்தில் அவர் நடித்த துணிவு படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் வாரி குவித்தது. அடுத்ததாக அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தின் கேரியரில் அவர் நடித்த வரலாறு படம் முக்கியத்துவம் வாய்ந்தது.

வரலாறு படைத்த கே.எஸ்.ரவிக்குமார்

வரலாறு படைத்த கே.எஸ்.ரவிக்குமார்

வரலாறு படத்தை முதலில் கமல் ஹாசனுக்குத்தான் கே.எஸ்.ரவிக்குமார் உருவாக்கினார். ஆனால் தெனாலி படத்தின் மீது கமலின் கவனம் இருந்ததால் வரலாறு படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. இதனையடுத்து வரலாறு கதையை ரஜினியிடமும் கூறினார் அவர். ஆனால் அவராலும் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. கமல், ரஜினிக்கு அடுத்ததாகத்தான் கே.எஸ்.ரவிக்குமார் வரலாறு கதையை அஜித்திடம் கூறினார்.

நடிப்பில் வரலாறு படைத்த அஜித்குமார்

நடிப்பில் வரலாறு படைத்த அஜித்குமார்

வரலாறு படத்தில் கமிட் ஆன அஜித்குமார் நடிப்பில் அந்தப் படத்தில் வரலாறு படைத்தார் என்றே கூறலாம். அந்த அளவுக்கு அதில் அஜித்தின் நடிப்பு அட்டகாசமாக இருக்கும். மூன்று கெட்டப்புகளில் தோன்றிய அஜித் பெண் நளினம் கொண்ட கதாபாத்திரத்தில் நடிப்பில் அடுத்தக்கட்டத்திற்கு சென்றிருப்பார். அதேபோல் நடனத்தில் அஜித் எப்போதும் சொதப்புவார் என்று எழுந்திருந்த விமர்சனங்களையும் இந்தப் படத்தில் நடனமாடி உடைத்தெறிந்தார்.

மெகா ஹிட்டான வரலாறு

மெகா ஹிட்டான வரலாறு

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான வரலாறு படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மெகா ஹிட்டானது. அஜித் இதுவரை நடித்ததில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம் வரலாறு என்று ரசிகர்கள் இன்றளவும் கூறிவருகின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடல்களும் ஆல்பம் ஹிட்டாகின.

சிக்கலை சந்தித்த வரலாறு படம்

சிக்கலை சந்தித்த வரலாறு படம்

வரலாறு படம் வெளியாகி வரலாறு படைத்தாலும் அந்தப் படம் வெளியாவதற்கு சில சிக்கல்கள் இருந்ததாம். படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் பொருளாதார பிரச்னையால் உருவானதாம். அதாவது அனைத்து கணக்குகளும் முடித்து பார்த்தால் சில லட்சங்கள் குறைவாக இருந்ததாம்.

வரலாறுக்காக அஜித் செய்த செயல்

வரலாறுக்காக அஜித் செய்த செயல்

இதனையடுத்து படத்தின் தயாரிப்பாளர் அஜ்த்தை நேரடியாக சென்று சந்தித்திருக்கிறார். அப்போது படத்தின் ரிலீஸுக்கு தேவைப்பட்ட பணம் தன்னிடம் இல்லை என கூறிய அஜித், "வரலாறு படம் என் கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தப்போகிற படம். கண்டிப்பாக படம் வெளியாகி நல்ல வசூலைத்தான் செய்யவிருக்கிறது.

அஜித் கொடுத்த ஐடியா

அஜித் கொடுத்த ஐடியா

அப்படி வசூல் செய்யவில்லை என்றால் எனது அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்கும்போது அதை வைத்து உங்களுக்கு தேவையான பணத்தை கொடுக்கிறேன். அதுவும் இல்லையென்றால் நல்ல தயாரிப்பாளரிடம் இருந்து பணத்தை இப்போதைக்கு பெற்றுக்கொள்ளுங்கள். எனது அடுத்த பட அட்வான்ஸை வைத்து அந்தத் தயாரிப்பாளருக்கு பணத்தை கொடுக்கலாம் என்றாராம்.

இதனையடுத்து நேரடியாக ஆனந்த பிக்சர்ஸ் நிறுவனர் சுரேஷ் பாலாஜியிடம் சென்று தேவையான பணத்தை பெற்றுக்கொண்டாராம். இந்தத் தகவலை விநியோகஸ்தர் சிவா பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X