"டிஸ்டண்ட்” புதிய திரில்லர் படம் ... சோசியல் டிஸ்டன்சிங் பற்றி பேசுமா?

சென்னை: தொட்டி ஜெயா, இருட்டு போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய VZ துரை, டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து Sci-Fi திரில்லர் படத்தை தயாரிக்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு 'ராடன் பிலிம் பெஸ்டிவெல்' குறும்பட போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற சிறந்த குறும்படம் 'அசரீரி'.

அந்த படத்தை இயக்கிய ஜி.கே தொடர்ந்து 'காதலின் தீபம் ஒன்று ' என்ற குறும்படத்தை இயக்கினார். இது யூடியூபில் ஒரு மில்லியனுக்கு மேலான பார்வையாளர்களை கடந்து அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

இந்த குழுவினரால் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் Sci-Fi திரில்லராக "டிஸ்டண்ட்" எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்பட்டு விரைவில் வெளிவர இருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல வில்லன் நடிகர் கபீர் துகான் சிங் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ஒளிப்பதிவாளர்

ஒளிப்பதிவாளர்

இந்த லாக் டவுன் சமயத்தில் பல திரைப்படங்கள் டிஜிட்டல் உலகில் தன் எல்லா விதமான ப்ரமோஷன்ஸும் நடக்கிறது. அப்படி தான் இந்த படத்தின் விளம்பர வேலைகளும் ஆரம்பமாகி உள்ளது. ஜீவி படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீண் குமார் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும் போது இந்த கதை தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாக தெரிவித்தார்.

நடிகர்கள்

நடிகர்கள்

படத்தின் நாயகனாக அறிமுக நாயகன் சுரேஷ் நல்லுசாமி நடிக்கிறார். விஜய் டிவி ஆயுத எழுத்து தொடர் புகழ் சௌந்தர்யா நஞ்சுதன் இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். விஜய் சித்தார்த்தா இசையமைக்கிறார். சுரேஷ் நல்லுசாமி, சௌந்தர்யா நஞ்சுதன், பிக் பிரிண்ட் கார்த்திக், ராதாகிருஷ்ணன், முத்துபாண்டியன் ஆகிய பல நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

வைரஸ் பற்றிய படம்

வைரஸ் பற்றிய படம்

வைரஸ் சம்பந்த பட்ட எத்தனை படங்கள் வர போகிறது என்பதை இனி வரும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். நிறைய ஹாலிவுட் மற்றும் மலையாள இயக்குனர்களும் , நிறைய கதைகளை இப்போதே திட்டம் தீட்டி உள்ளனர். தமிழ் சினிமாவின் சீனியர் எழுத்தாளர்கள் நிறைய கதை விவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். கண்டாஜியன் என்ற ஹாலிவுட் படமும், வைரஸ் என்ற மலையாள படமும் இன்றும் நம் நினைவில் நிற்கிறது. 2020 முடிவுக்குள் நிறைய வெப்சீரிஸ் மற்றும் குறும்படங்கள் லாக் டவுன் பற்றியும் வைரஸ் பற்றியும் வர இருக்கிறது, அந்த வரிசையில் இந்த டிஸ்டன்ட் என்ற படமும் பட்டியலில் இடம் பெரும். நல்ல படங்கள் சுவாரஸ்யமான திரைக்கதை இருந்தால் மக்கள் கொண்டாடுவார்கள் என்பதில் மாற்று கருது எதுவும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X