twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படத்தின் உரிமையை 2 பேருக்கு விற்பதா? வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்!

    By
    |

    சென்னை: வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ராஜபார்வை படத்தின் தயாரிப்பாளர், மோசடி செய்துவிட்டதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    Recommended Video

    Penguin தொடர்ந்து அடுத்த OTT Release Danny | Varalakshmi Sarathkumar

    வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஜே.கே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராஜபார்வை.

    இதை முதலில் தயாரிக்க ஆரம்பித்த ஜெயபிரகாஷ் மனசெகவுடா என்பவர், படத்தின் மொத்த உரிமையையும் கே,என்.பாபுரெட்டி என்கிற தயாரிப்பாளரிடம் விற்றுவிட்டார்.

    எப்படி நடந்தது அந்த மேஜிக்..? காதல் தொடங்கி 9 வருடங்கள்.. கணவருக்கு நன்றி சொல்லும் பிரபல நடிகை!எப்படி நடந்தது அந்த மேஜிக்..? காதல் தொடங்கி 9 வருடங்கள்.. கணவருக்கு நன்றி சொல்லும் பிரபல நடிகை!

    வெளிநாட்டு உரிமை

    வெளிநாட்டு உரிமை

    வெளிநாடுகளில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்படங்களை வாங்கி வெளியிட்டு வரும் மலேசிய பாண்டியன் என்பவர் பாபுரெட்டியிடம் ராஜபார்வை படத்தின் வெளிநாட்டு உரிமையை ரூ.2௦ லட்சத்துக்கு விலை பேசி முடித்துள்ளார். பத்து லட்ச ரூபாயை அட்வான்சாக கொடுத்துள்ளார். கடந்த வருடம் ஜூன் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறிய பாபுரெட்டி, படத்தை முடிக்கவில்லை.

    அருண் பாண்டியன்

    அருண் பாண்டியன்

    இதனால் தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டுள்ளார் மலேசியா பாண்டியன். ஆனால் பாபுரெட்டி பணத்தைத் திருப்பித் தராமல் இருந்துள்ளார். இந்த விஷயம் தென்னிந்திய திரைப்பட ஏற்றுமதியாளர் சங்க தலைவர் அருண்பாண்டியன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து விரைவில் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருவதாக அவர் முன்னிலையில் உறுதி அளித்தார், பாபுரெட்டி.

    வேறொருவருக்கு விற்றார்

    வேறொருவருக்கு விற்றார்

    இந்த நேரத்தில் கொரோனா காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நிலைமை மாறிவிட்டது. இதைப் பயன்படுத்தி பாபு ரெட்டி ராஜபார்வை படத்தின் மொத்த உரிமையையும் விஜய ராஜேஷ் ரங்கப்பா என்பவருக்கு விற்றுவிட்டார். இவர், இதன் வெளிநாட்டு உரிமையை, ஏபி இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்துக்கு 17 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டார். ஏற்கனவே வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டதை அவரிடம் கூறியிருக்க வேண்டும் அல்லது மலேசிய பாண்டியனுக்கு அட்வான்ஸ் தொகையை திருப்பித் தந்திருக்க வேண்டும்.

    திருப்பிக் கொடுக்காமல்

    திருப்பிக் கொடுக்காமல்

    அப்படி செய்யவில்லை. மலேசிய பாண்டியனுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்காமல் படத்தை ஒடிடி தளங்களில் வெளியிடவும் முயற்சி நடந்து வருகிறது. படத்தை தயாரிக்க ஆரம்பித்த தயாரிப்பாளர் முதல் இப்போது வாங்கியுள்ள தயாரிப்பாளர் வரை மூன்று பேரும் இயக்குனர் ஜேகேவும் சேர்ந்தே இந்த மோசடியில் ஈடுப்பட்டுள்ளார்கள் என்று மலேசியா பாண்டியனுக்கு தெரிவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    மோசடி புகார்

    மோசடி புகார்

    இதனை தொடர்ந்து இவர்கள் மூவர் மீதும் சென்னை காவல் ஆணையரிடம் ஆன் லைன் மூலமாக புகார் அளித்துள்ளார், மலேசியா பாண்டியன். மேலும் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இதுபோன்று வெளிநாட்டு உரிமைகளை விற்கும் நபர்கள் மோசடியில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்களும் தகுந்த கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து இவர்கள் மூவர் மீதும் சென்னை காவல் ஆணையரிடம் ஆன் லைன் மூலமாக புகார் அளித்துள்ளார், மலேசியா பாண்டியன். மேலும் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இதுபோன்று வெளிநாட்டு உரிமைகளை விற்கும் நபர்கள் மோசடியில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்களும் தகுந்த கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    English summary
    Distributor Malaysia Pandian complaint against Varalakshmi sarathkumar's Raja Paarvai Producer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X