எந்தப் படத்துக்கு டிமாண்ட் இருக்குதோ.. அந்த படம் தான் தியேட்டரில் போடனும்.. எஸ்.ஆர். பிரபு பளீச்!

சென்னை : எந்த படத்திற்கு மக்களின் ஆதரவு இருக்கிறதோ அந்த படத்தைத்தான் தியேட்டரில் போட வேண்டும் என்று கேஜிஎஃப்2 தமிழக விநியோகஸ்தர் எஸ்.ஆர் பிரபு தெரிவித்துள்ளார்.

கே.ஜி.எஃப் சேப்டர் 2, 2022-ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று. முதல் பாகம், மாபெரும் வரவேற்பை பெற்றதுடன், ரசிகர்களிடையே இரண்டாம் பாகம் வெளியீட்டிற்கான ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது.

தமிழ் புத்தாண்டு அன்று வெளியான நிலையில், இப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

யாஷ் மகிழ்ந்தார்.

யாஷ் மகிழ்ந்தார்.

இந்நிலையில், விநியோகஸ்தல் எஸ்.ஆர்.பிரபு அண்மையில், ஊடகம் ஒன்றுக்கு அளித்துள் ளபேட்டியில், கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் வெற்றியால் கே.ஜி.எஃப். டீம் ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்க. அதுவும் ரிலீஸுக்கு பிறகும் கிடைச்ச வரவேற்பு அபரிமிதமானது. தமிழ்நாட்டுல இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைச்சத நினைச்சு யாஷ் மிகவும் நெகிழ்ந்து போனார். அதே போல, இயக்குநர் பிரஷாந்த் நீல் கூட என்னை பாராட்டினார் நானும் அவரை பாராட்டினேன் என்றார்.

அதிக திரையரங்குகள்

அதிக திரையரங்குகள்

ஆரம்ப காலகட்டத்தில் எங்களோட படங்களை மட்டும்தான் விநியோகம் பண்ணிட்டு இருந்தோம். அதன்பிறகுதான் வெளிப்படங்கள் விநியோகம் பண்ண ஆரம்பிச்சோம். கே.ஜி.எஃப்2 க்கு எங்களோட கைதி படத்திற்கு கிடைத்த திரையரங்கு மாதிரி குறைவான திரையரங்கு கிடைச்சா போது நினைச்சோம். ஆனால் நாங்கள் நினைச்சதை விட அதிகமான திரையரங்கு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றார்.

பான் இந்தியப்படம்

பான் இந்தியப்படம்

கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 2020ல் வெளியாக வேண்டிய படம், கொரோனாவால் அது தள்ளிவைக்கப்பட்டு கடைசியில் ஏப்ரல் 14ந் தேதி வெளியாகி இருக்கு. பீஸ்ட் படத்துடன் மோதவேண்டும் எண்ணம் இல்லை. பான் இந்திய திரைப்படம் என்பதால் ரிலீஸ் தேதி முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டது. இதை யாஷ் கூட செய்தியாளர்களிடம் கூறினார் என்றார்.

அதிக டிமாண்ட்

அதிக டிமாண்ட்

தொடர்ந்து பேசிய எஸ்ஆர்.பிரபு, தியேட்டர்களை பொறுத்தவரை எந்தப் படத்துக்கு மக்களிடம் அதிக டிமாண்ட் இருக்குதோ.. அந்த படத்தைதான் கொடுப்பாங்க. திரைப்படங்களின் ரிசல்ட்டும், மக்களுடைய ஆதரவும்தான் திரையரங்குகளின் எண்ணிக்கையை முடிவு பண்ணுமே தவிர, வேறு எந்த ஒரு சக்தியும் முடிவு பண்ணமுடியாது என்கிறார் எஸ்.ஆர்.பிரபு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X