»   »  தெறி செங்கல்பட்டு சிக்கல்... திருப்பூர் சுப்பிரமணியத்தின் 'வேலை'யா?

தெறி செங்கல்பட்டு சிக்கல்... திருப்பூர் சுப்பிரமணியத்தின் 'வேலை'யா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெறி படத்தின் செங்கல்பட்டு ஏரியா விற்பனையில் சிக்கல் நீடிக்கக் காரணமே திருப்பூர் சுப்பிரமணியம்தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் சுப்பிரமணியன் விநியோகஸ்தர் மட்டுமல்ல, தியேட்டர் உரிமையாளரும்கூட.


கோவை மற்றும் திருப்பூரில் இவருக்கு திரையரங்குகள் உள்ளன. ரஜினி நடித்த லிங்கா பட பிரச்சினையில் இவர் தலைதான் அதிகமாக உருண்டது.


Distributor Thirupur Subramaniyam creating troubles for Theri?

தனது அரங்குகளில் தெறி படத்தைத் திரையிட எம்ஜி அடிப்படையில் தாணு சொன்ன விலையைத் தர திருப்பூர் சுப்பிரமணியன் மறுத்ததாகக் கூறப்படுகிறது.


தாணு சொல்லும் விலைக்கு யாரும் படத்தை வாங்கக் கூடாது என சுப்பிரமணியன்தான் செங்கல்பட்டு விநியோகஸ்தர்களையும் தூண்டிவிட்டதாகக் கூறுகிறார்கள்.


ஆனாலும் யாருடைய நெருக்கடிக்கும் பணியப் போவதில்லை என்று உறுதியுடன் இருக்கும் தாணு, பிரச்சினைக்குரிய பகுதிகளில் சொந்தமாகவே தெறி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளாராம்.

English summary
Sources say that producer and distributor Thirupur Subramanian has creating problems against Kalaipuli Thaanu in Theri release.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil