கழுகு 2.. க்ளைமாக்ஸ் பார்த்து ‘அவங்களே’ அழுதுட்டாங்களாம் பாஸ்!

கிருஷ்ணா, பிந்துமாதவி நடித்துள்ள கழுகு 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகிறது.

சென்னை: கழுகு 2 படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை பார்த்துவிட்டு விநியோகஸ்தர்கள் கண்கலங்கிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2012ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'கழுகு'. ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் உருவாகியுள்ளது கழுகு 2. மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வரும் ஆகஸ்ட்-1ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது.

Distributors cried after watching Kazhugu 2 climax

இந்த திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு திரையிடப்பட்டது. த்ரில் நிறைந்த இந்த திரைப்படத்தை ரசித்துப் பார்த்த விநியோகஸ்தர்கள், கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து கண்கலங்கி விட்டார்களாம். இதில் உணர்ச்சிவசப்பட்ட கோவை விநியோகஸ்தர் சிதம்பரம், கோவை ஏரியா வெளியீட்டு உரிமையை அவுட் ரேட் முறையில் வாங்கியுள்ளார்.

கழுகு படத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களின் பிணங்களை உயிரைப் பணயம் வைத்து மீட்டெடுக்கும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணா, கழுகு 2 படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான செந்நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X