அதெல்லாம் பொய்யா கோபால்.. தர்பார் படத்தால் தலையில் துண்டு.. ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள்!

Recommended Video

Darbar Public Opinion | Darbar Audience Review | Rajini | Nayanthara | Anirudh

சென்னை: தர்பார் படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி விநியோகஸ்தர்கள் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் முதல் முறையாக வெளியான படம் தர்பார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆதித்ய அருணாச்சலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். தர்பார் படத்தில் வில்லனாக சுனில் ஷெட்டி நடித்திருந்தார்.

7000 தியேட்டர்கள்

7000 தியேட்டர்கள்

தர்பார் படம் கடந்த 9ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது. உலகம் முழுக்க 7000 தியேட்டர்களில் ரிலீஸானது தர்பார் படம். படத்தில் இளமை தோற்றத்துடனும் சுறுசுறுப்பான போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்றப்போதும் இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர்.

8 மாவட்ட விநியோகஸ்தர்கள்

8 மாவட்ட விநியோகஸ்தர்கள்

படம் ரிலீஸான நான்கு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்ஷன் அறிவித்தது. இந்நிலையில் படத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக 8 மாவட்டங்களை சேர்ந்த விநியோகஸ்தர்கள் ரஜினிகாந்த்தை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

முறையிட முடிவு

முறையிட முடிவு

முன்னதாக விநியோகஸ்தர்கள் லைகா நிறுவனத்தை அணுகிய போது ஒப்பந்தத்தின் அடிப்படையில் நஷ்டத்தொகைக்கு லைகா பொறுப்பாகாது என்று கூறியிருப்பதால் ரஜினிகாந்திடம் முறையிட முடிவு செய்துள்ளனர். தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் இழப்பீட்டு தொகையை பெற்று தரவேண்டும் என்றும் என்று எட்டு மாவட்ட விநியோகஸ்தர்கள் நேற்று சென்னையில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்றனர்.

ரூ. 30 கோடி நஷ்டம்

ரூ. 30 கோடி நஷ்டம்

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விநியோகஸ்தர்களை இன்று சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் நடிகர் ரஜினிகாந்தை விநியோகஸ்தர்கள் இன்று சந்திக்க உள்ளனர். இதனை தொடர்ந்து விநியோகஸ்தர்கள் வசூல் விவரம் குறித்த தகவல்களை தெரிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. தர்பார் படத்தால் 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X