twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காஷ்மீரில் என் மாமனார் மாமியார் என்ன செய்யறாங்களோ... ஊர்மிளா மாடோண்கர் பதற்றம்

    |

    சென்னை: இந்திய அரசியல் சட்டம் 370ஆவது பிரிவை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தது, சிறிதும் மனிதாபிமானமற்ற செயல் என்று நடிகை ஊர்மிளா மாடோண்கர் குற்றம் சாட்டியுள்ளார். அங்கு கஷ்டப்படும் தனது மாமனார் மாமியாருடன் பேச முடியாமல் தவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆதரவாகவும் கண்டனம் தெரிவித்து குறை கூறியும், பலர் தங்கள் கருத்தினை தெரிவித்து வரும் நிலையில் பாலிவுட் நடிகையாக அனைவரையும் கவர்ந்து இன்று அரசியல்வாதியாக மாறியிருக்கும் ஊர்மிளா மாடோண்கரும் இந்த பிரச்சனை குறித்து தனது ஆதங்கத்தினை தெரிவித்துள்ளார்.

    Dividing the state of Jammu and Kashmir was an inhumane act-Urmila Matondkar

    சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளை பறித்து மத்திய அரசின் உத்தரவின்படி அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    வைரல் வீடியோவால் 8 ஆண்டுகள் கழித்து பாடகியை சந்தித்த மகள்வைரல் வீடியோவால் 8 ஆண்டுகள் கழித்து பாடகியை சந்தித்த மகள்

    அதன் பின்னர் அந்த மாநிலம் முழுவதும் பதட்டமான சூழலே நிலவி வந்தது. பாதுகாப்பு கருதி, அரசியல் தலைவர்கள் அங்கு செல்ல பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, தொலைத் தொடர்பு சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன,

    Dividing the state of Jammu and Kashmir was an inhumane act-Urmila Matondkar

    அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் பதற்றத்தோடு வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். ஆனால், தற்போது இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், நடிகையும், அரசியல்வாதியுமான ஊர்மிளா மாடோண்கர், தனது கணவரின் பெற்றோர் காஷ்மீரில் வசிப்பதாகவும் அவர்களை கடந்த 22 நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மிகவும் ஆவேசத்துடன் மத்திய அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

    Dividing the state of Jammu and Kashmir was an inhumane act-Urmila Matondkar

    அரசியல் சாசனத்தின் 370ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்ததன் மூலம் மனிதாபிமானமற்ற முறையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அங்கே வசிக்கும் எனது மாமனார் மற்றும் மாமியாரை கடந்த 22 நாட்களாக என்னாலும், எனது கணவராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    அவர்கள் நீரிழிவு நோயாளிகள், அவர்களுக்கு போதுமான மருந்துகள் உள்ளதா இல்லையா என்பது கூட தெரியவில்லை என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துவிட்டார். மத்திய அரசு இதற்கு ஒரு தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் ஊர்மிளா மாடோண்கர்.

    Read more about: urmila matondkar
    English summary
    Actress Urmila Matondkar has accused the Indian Constitution of repealing Article 370 and dividing the state of Jammu and Kashmir into two acts of inhumanity.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X