Divya Bharathi: ஜி.வி பிரகாஷ் உடன் ரீல்ஸ் போட்ட திவ்ய பாரதி.. கிட்ட வாயா ராசா பாட்டுக்கு க்யூட் டான்ஸ்

சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் திவ்ய பாரதி கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் கிங்ஸ்டன். படம் மார்ச் மாதம் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் பாடல்களும் டீசரும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் புரோமோசன் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில், நடிகை திவ்ய பாரதியும் ஜி.வி. பிரகாஷ் குமாரும் இணைந்து கிங்ஸ்டன் படத்தில் உள்ள ராசா ராசா பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

நடிகை திவ்ய பாரதி தமிழில் நடிக்கும் மூன்றாவது படம் கிங்ஸ்டன். பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான திவ்ய பாரதி, அதன் பின்னர் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதேபோல் தெலுங்கில், கோட் என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் அவருக்கு அவரது முதல் படத்திலேயே, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் வெளிச்சமும் கிடைத்தது.

Divya Bharathi GV Prakash Kumar kingston

காரணம் பேச்சுலர் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் உடன் இணைந்து, செம க்ளோஸான காட்சிகளில் நடித்தார். இது மட்டும் இல்லாமல், செம கிளாமரான காட்சிகளிலும் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். இதன் காரணமாக பலரது கவனத்தை ஈர்த்தார். திவ்ய பாரதி அடிப்படையில், மாடலிங் செய்து கொண்டு இருப்பவர். சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்ததால், வாய்ப்பு கிடைத்ததும் நடித்தார். பேச்சுலர் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் உடன் நெருக்கமாக நடித்தது மட்டும் இல்லாமல், அவருடன் டேட்டிங் செய்து வருகிறார் என சிலர் இணையத்தில் புகைச்சலை கிளப்பினார்கள்.

Divya Bharathi GV Prakash Kumar kingston

ஜி.வி. - சைந்தவி: கடந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும், சைந்தவி தம்பதியர் விவாகரத்து பெறப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, இணையவாசிகள் பலரும் இவர்களின் பிரிவுக்கு காரணம் திவ்ய பாரதி தான் என கூற ஆரம்பித்துவிட்டார்கள். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவர்கள் பிரிந்ததற்கே என்னை காரணம் சொன்னார்கள்.

Divya Bharathi GV Prakash Kumar kingston

இந்நிலையில், இந்தப் படத்திலும் ஜி.வி. சாருடன் நடிக்கிறேன், என்னென்ன சொல்லப் போறாங்களோ என அவரிடமே கூறினேன். இருவரும் ஒரு கான்செர்ட்டில் இணைந்து பாடினார்கள். நான் அப்பாடா இனி நம்மை யாரும் திட்ட மாட்டார்கள் என நினைத்துக் கொண்டு இருந்தேன். அப்போதும் கூட என்னைத்தான் அதிகம் திட்டுகிறார்கள்.

Divya Bharathi GV Prakash Kumar kingston

ரீல்ஸ்: இன்ஸ்டாகிராம் கமெண்ட்டில் திட்டுவதைப் பார்ப்பேன். ஆனால் நான் என்ன செய்ய முடியும், அமைதியாக இருந்துவிடுவேன்" எனக் கூறியிருந்தார். திவ்ய பாரதி கூறியதைப் போல பலரும் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி விவாகரத்திற்கு காரணம், திவ்ய பாரதி தான் எனக் கூறி வருகிறார்கள். தன் மீது இவ்வளவு விமர்சனங்களை பலரும் வைக்கும் போது, சினிமாவில் கவனமாக செயல்படும் திவ்ய பாரதிக்கு வாழ்த்துக்களை கூறும் ரசிகர்கள் பட்டாளமும் உள்ளார்கள்.

Divya Bharathi GV Prakash Kumar kingston

இந்நிலையில் கிங்ஸ்டன் படத்தில் இடம்பெற்றுள்ள ராசா ராசா பாடலுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் திவ்ய பாரதி ரீல்ஸ் செய்துள்ளார்கள் இது தொடர்பான வீடியோவை திவ்ய பாரதி தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக வைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் திவ்ய பாரதியை சுமார் 37 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

Divya Bharathi GV Prakash Kumar kingston

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X