ஒருவரை அமுக்கி வளரக்கூடாது? திவ்யா சொன்ன அந்த வார்த்தை.. நேர்மைக்கு கிடைத்த பரிசு!
சென்னை: பிக் பாஸ் சீசன் 9 கிராண்ட் பினாலே இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து கிடைத்த தகவலின் படி வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் வந்த திவ்யா கணேஷ் பிக்பாஸ் சீசன் 9 ன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், நேர்மைக்கு கிடைத்த பரிசு என அவரின் ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக அமீர், திவ்யா, பிரஜன். சாண்ட்ரா என நான்கு போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். இதில், பிரஜன், அமீத், சாண்ட்ரா ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் வெளியேறிய நிலைகள், திவ்யா மட்டும் கடைசி வரை வீட்டிற்குள் இருந்து டைட்டிலை வென்று இருக்கிறார். அதற்கு காரணம், அவரின் தைரியம் தான், யார் என்ன செய்தாலும் அதை முதுகிற்கு பின்னால் பேசாமல், முகத்திற்கு முன் கேள்வி எழுப்பினார். மேலும், யாரையும் அமுக்கி வளரக்கூடாது என்பதில் திவ்யா தெளிவாக இருந்தார். அதுபோல, பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மற்றவர்களை அமுக்கினாலும் அவர்களுக்கு எதிராக குரலை எழுப்பினார் திவ்யா.

பிக் பாஸ் சீசன் 9: கார் டாஸ்கின் போது கம்ருதீன், பார்வதி இருவரும் சேர்ந்து சாண்ட்ராவை எட்டி உதைத்து வெளியில் தள்ளினார்கள். இதைப்பார்த்த சபரி மற்றும் கானா வினோத் இருவருமே காரில் இருந்து இறங்கி ஓடி சாண்ட்ராவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கேள்வி கேட்காத நிலையில், திவ்யா மட்டும் பார்வதிக்கு எதிராக அதிரடியாக கேள்விகளை எழுப்பினார். இந்த நேரத்தில் இருந்து தான் திவ்யாவிற்கு மக்களின் ஆதரவு அதிகரித்தது. கானா வினோத் டைட்டில் கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் 18 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால், திவ்யாவிற்கு டைட்டில் பெரும் வாய்ப்பு சாதகமானது. எனினும், திவ்யா மற்றும் சபரி என இருவருக்குமே கணிசமான மக்களின் ஆதரவு இருந்தது. இருவருக்குமே வாக்குகள் அதிகரித்து வந்தன நிலையில், கடைசியில் அதிக வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் டைட்டிலைஸ் திவ்யா தட்டி தூக்கி இருக்கிறார். பலரும் திவ்யாவுக்கு வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். இது அவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசு என அவரின் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











