நைசா என் படுக்கையில் வந்து படுத்தார்: பிரபல நடிகர் மீது நடிகை புகார்
Recommended Video

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் அலென்சியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை திவ்யா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட், கோலிவுட் போன்றே மல்லுவுட்டிலும் மீ டூ இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் எழுந்தது. இந்நிலையில் நடிகர் அலென்சியர் மீது நடிகை திவ்யா கோபிநாத் புகார் தெரிவித்துள்ளார்.
முதலில் பெயர் தெரிவிக்காமல் கடிதம் எழுதிய அவர் தற்போது ஃபேஸ்புக்கில் அது நான் தான் என்று தெரிவித்துள்ளார். அலென்சியர் பற்றி திவ்யா கூறியிருப்பதாவது,

அலென்சியர்
நான் என்னுடைய 4வது படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அலென்சியருடன் சேர்ந்து நடித்தது அது தான் முதல் மற்றும் கடைசி முறை. அலென்சியரை நேரில் சந்திக்கும் வரை அவர் மீது மிகவும் மரியாதை வைத்திருந்தேன். மதியம் சாப்பிடும் போது அந்த டேபிளில் நான், அலென்சியர் மற்றும் ஒரு நடிகர் இருந்தார். அப்போது அலென்சியர் என் மார்பு பகுதியையே பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு சங்கடமாகிவிட்டது.

அவமானம்
ஒரு நாள் அவர் நடிகை ஒருவருடன் என் அறைக்குள் வந்து கலைஞரின் சுதந்திரம் பற்றி எனக்கு அறிவுரை வழங்கினார். எனக்கு மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் இருந்தும் என் ரொம்ப வீக் என்று கூறி அசிங்கப்படுத்தினார். அவரை அறையை விட்டு வெளியே தள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் சீனியர் என்பதால் பேசாமல் இருந்தேன்.

தொல்லை
எனக்கு மாதவிடாய் நேரமாக இருந்ததால் சோர்வாக இருந்தது. இயக்குனரிடம் அனுமதி கேட்டு ஹோட்டல் அறைக்கு சென்றேன். அப்போது அலென்சியர் வந்து கதவை தட்டினார். நான் உடனே இயக்குனருக்கு போன் செய்து கூறினேன். அவருடன் போனில் பேசிக் கொண்டே கதவை திறந்தேன். அலென்சியர் குடிபோதையில் என் அறைக்குள் நுழைந்தார். அவர் என் படுக்கையில் அமர்ந்து தியேட்டர் கலைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றார். அதற்குள் உதவி இயக்குனர் வந்து அலென்சியரின் ஷாட் வந்துவிட்டது என்று அழைத்துச் சென்றார்.

படுக்கை
படப்பிடிப்பு தளத்தில் என்னை பார்த்துக் கொண்டே இருந்ததுடன் அசிங்கமாக நாக்கை சுழற்றி சைகை செய்தார். அன்று மாலை நடந்த பார்ட்டியில் அவர் பெண்களிடம் செக்ஸ் பற்றி பேசினார். மற்றொரு நாள் என் அறையில் தங்கியிருந்த பெண் கதவை பூட்ட மறந்துவிட்டார். அந்த பெண் குளிக்கச் சென்ற நேரம் அலென்சியர் வந்து என் அருகே படுக்கையில் படுத்தார். தூங்கிக் கொண்டிருந்த நான் ஏதோ பக்கத்தில் இருப்பதை உணர்ந்து கண் விழித்தால் அலென்சியர். என் அருகில் படுத்துக் கொண்டு தூங்குகிறாயா என்று கேட்டார்.
பயம்
அலென்சியரை பார்த்து அதிர்ச்சியில் நான் எழ முயன்றால் அவர் என் கையை பிடித்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் நேரம் படு என்றார். வெளியே போகுமாறு கூறி நான் சத்தம் போட்டேன். என் சத்தம் கேட்டு என் ரூம் மேட் என்னவென்று பாத்ரூமில் இருந்தபடியே கேட்டாள். அவள் வெளியே வருவதற்குள் அலென்சியர் சென்றுவிட்டார் என்றார் திவ்யா.


Click it and Unblock the Notifications











