பேட்மிண்டனில் அசத்தும் விஜய் மகள்
Recommended Video

சென்னை: விஜய்யின் மகள் பேட்மிண்டன் விளையாட்டில் அசத்தி வருகிறார்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறும்படங்களை இயக்கி, நடித்து வருகிறார். தாத்தாவை போன்று இயக்குனராகவும், அப்பாவை போன்று ஹீரோவாகவும் ஆக திட்டமிட்டுள்ளாராம்.

ஷங்கர் இயக்கத்தில் ஜேசன் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. ஜேசனின் தங்கை திவ்யா சாஷாவுக்கு பேட்மிண்டன் விளையாட்டில் ஈடுபாடு அதிகம். அவர் அதில் கவனம் செலுத்தி வருகிறார்.
சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கிறார் அவர். பள்ளியின் பேட்மிண்டன் அணியில் திவ்யாவும் உள்ளார். பேட்மிண்டன் அணியின் புகைப்படங்களை அந்த பள்ளியின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதை பார்த்த விஜய் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பெருமையுடன் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
அந்த புகைப்படங்களில் திவ்யா உள்ளார். அந்த குழு அண்மையில் நடந்த போட்டி ஒன்றில் 3வது இடம் பிடித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











