2 திருமணம், 3 குழந்தைகளா? போட்டோவை வெளியிடுங்க..நக்கலாக பதிலடி கொடுத்த திவ்யா சத்யராஜ்!
சென்னை: சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜூக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகிவிட்டது. ஆனால், அவர் தனக்கு திருமணமாகவில்லை என சொல்லிக்கொண்டு இருக்கிறார் என பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இது இணையத்தில் பெரும் புயலை கிளப்பியதை அடுத்து திவ்யா சத்யராஜ் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், திவ்யா சத்யராஜ் எனக்கு திருமணமாகவில்லை நான் சிங்கிள் என சொல்லிக்கொண்டு இருக்கிறார். உண்மையில் திவ்யா சத்யராஜுக்கு 18 வருடத்திற்கு முன்பே திருமணமாகி, விவாகரத்தாகிவிட்டது. சத்யராஜ் கோயம்புத்தூரில் குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்து, திவ்யா சத்யராஜுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். திவ்யா சத்யராஜின் கணவர் வேறு யாரும் இல்லை சத்யராஜின் உடன் பிறந்த சகோதரி கல்பனாவின் மகன் மகேந்திரன் மன்றாடியார் தான்.

பயில்வான் ரங்கநாதன்: ஆனால், திருமணமான அடுத்த ஐந்து நிமிடத்திலேயே திவ்யா தனது கழுத்தில் இருந்த தாலியை கழற்றி வீசிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு சத்யராஜ் தனது மகனையும் மருமகளையும் சமாதானப்படுத்தி சேர்த்து வைத்தார். 14 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால், தினமும் திவ்யா தனது கணவரை அடித்து டார்ச்சர் செய்வார். ஒரு கட்டத்தில் திவ்யாவின் டார்ச்சரை தாங்க மகேந்திரன் இதற்கு மேல் சேர்ந்து வாழ முடியாது என சத்யராஜிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதுதான் திவ்யா சத்யராஜின் திருமண வாழ்க்கை.
திவ்யா சத்யராஜ்: இதை நான் இப்போது சொல்வதற்கு காரணமே, நான் சத்யராஜிடம் பணம் வாங்கிவிட்டேன் என்று ஒரு பொய்யை திவ்யா சொன்னார். உண்மையில் நான் சத்யராஜிடம் பணம் வாங்கியதே இல்லை இது என் தாய் மீது சத்தியம். நீ என்னை பற்றி சொன்ன பொய்யால் தான் திவ்யாவின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்து, வண்டவாளம் தண்டவாளத்திற்கு வந்துவிட்டது என பயில்வான் ரங்கநாதன் பேசி இருந்தார். இவரின் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

2 திருமணம், 3 குழந்தைகள்: இதற்கு பதில் அளித்து இருக்கும் திவ்யா சத்யராஜ், அன்புள்ள யூடியூபர்களே, உங்களில் சிலர், நான் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டேன் என்றும், எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்றும் கூறி யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டுள்ளீர்கள். அதனால், எனது இரண்டு திருமணங்களின் புகைப்படங்களையும், எனது மூன்று குழந்தைகளின் புகைப்படங்களையும் தயவுசெய்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் கோபமாகவோ வருத்தமாகவோ இல்லை, இது மிகவும் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது. எனக்கு வழங்கிய இந்த பொழுதுபோக்கிற்கும், என் சாதாரண தோசையில் நீங்கள் சேர்த்துள்ள இந்த கூடுதல் "மசாலாவிற்கும்" நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என பதிவிட்டுவிட்டு "இந்த அடி போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா என கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications