இது திராவிட மண்.. சத்யராஜ் மகள் போட்ட அதிரடி போஸ்ட்.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!
சென்னை: லோக் சபா தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், பாஜகவுக்கு தனது எதிர்ப்பை காட்டும் விதமாக நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் அரசியலில் குதிக்கப் போகிறார் என சமீபத்தில் அறிவிப்புகள் வெளியாகின. நியூட்ரிஷியனாக இருக்கும் அவர் பாஜகவில் இணையப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டன. உடனடியாக அரசியலில் ஈடுபட போவதில்லை என்பது போல அறிவித்தார்.

மேலும், நடிகர் சத்யராஜ் மோடி பயோபிக்கில் நடிக்கப் போவதாகவும் வதந்திகள் கிளம்பின. அதற்கு பதிலளித்த சத்யராஜ் மணிவண்ணன் இருந்து இயக்கியிருந்தால் நடித்திருப்பேன் எனக் கூறினார். மேலும், இப்போது உள்ள வெற்றிமாறன், மாரி செல்வராஜ் மற்றும் பா. ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் படம் இயக்கினால் உள்ளதை உள்ளபடி காட்டுவார்கள் நானும் நடிக்க ரெடி என கலாய்த்திருந்தார்.
பாஜக படுதோல்வி: அண்ணாமலை தலைமையில் பாஜக கட்சி செயல்பட்டு வரும் நிலையில், லோக் சபா தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெறவில்லை. அண்ணாமலை கோவையில் தோற்ற நிலையில், அந்த கட்சி ஜீரோவாக மாறியது. அண்ணாமலையை வைத்து சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ட்ரோல்கள் பரவி வரும் நிலையில், சினிமா பிரபலங்களான பலரும் பாஜகவை விமர்சித்தும் திமுகவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.
திவ்யா சத்யராஜ் போஸ்ட்: இந்நிலையில், திவ்யா சத்யராஜ் 40/40 என பதிவிட்டு இது திராவிட மண். எப்போதும் வெற்றி நமக்கே என பதிவிட்டுள்ளார். திவ்யா சத்யராஜ் திமுகவில் இணையப் போகிறாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். சத்யராஜின் மகன் சிபிராஜ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், அவரது மகள் திவ்யா சத்யராஜ் நியூட்ரிஷியனாக பணிபுரிந்து வருகிறார். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை வெளியிட்டும் தனது கருத்துக்களை தெரிவித்தும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளார்.
ரஜினி படத்தில்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள கூலி படத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளார். ரஜினிகாந்த் உடன் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சிவாஜி மற்றும் எந்திரன் படங்களில் ஷங்கர் சொன்ன கதாபாத்திரம் தனக்கு செட்டாகாத நிலையில், பண்ணவில்லை. மற்றபடி ரஜினிக்கும் தனக்கும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications