twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன டிரெஸ் போடனும்னு நீங்க சொல்லாதீங்க.. திவ்யா சத்யராஜ் சூடான பதில்!

    |

    சென்னை : பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார்.

    இவர் கொரோனா காலத்தில் தமிழக மக்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை இலவசமாக வழங்க 'மகிழ்மதி' என்ற இயக்கத்தை ஆரம்பித்து அதை இன்று வரை சிறப்பாக செய்து வருகிறார்.

    ரத்தம் சொட்ட சொட்ட கவின்.. 6 முன்னணி இயக்குநர்கள் வெளியிட்ட லிஃப்ட் மோஷன் போஸ்டர்! ரத்தம் சொட்ட சொட்ட கவின்.. 6 முன்னணி இயக்குநர்கள் வெளியிட்ட லிஃப்ட் மோஷன் போஸ்டர்!

    மருத்துவ துறை, நீட் தேர்வு முறைகேடு என அனைத்து சமூக பிரச்சினைகளுக்கும் இவர் குரல் கொடுத்துள்ளார்.

    சர்ச்சைப்பேச்சு

    சர்ச்சைப்பேச்சு

    உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக அண்மையில் தீரத் சிங் ராவத் பதவியேற்றார். அம்மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், அப்போது, பெண்களின் உடை குறித்து அவர் பேசியது பெரும் சர்ச்சையானது.

    மோசமான எடுத்துக்காட்டாக

    மோசமான எடுத்துக்காட்டாக

    இன்றைய பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கொள்கிறார்கள்.மேலும், முழுங்கால், தொடை தெரிய அவர்கள் உடை அணிவது குழந்தைகளுக்கு மோசமான எடுத்துக்காட்டாக மாறிவிடும் என்றும், இதனால் சமுதாயத்தில் பல மோசமான சம்பவங்கள் நிகழ்வதாகவும். இதை நினைத்து தான் மிகவும் அச்சப்படுவதாகவும் தீரத் சிங் ராவத் பேசி இருந்தார். இணையத்தில் வைரலான இந்த பேச்சு பெரும் அதிர்வலைகளை எதிர்படுத்தியுள்ளது.

    நான் நானாக இருப்பேன்

    நான் நானாக இருப்பேன்

    இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து திவ்யா சத்யராஜ், தனது இஸ்டாகிராம் பக்கத்தில், கிழிந்த ஜீன்ஸுடன் இருக்கும் படங்களைப் பதிவேற்ற வேண்டாம் என சிலர் தனக்கு அறிவுரை கூறியதாகவும், அரசியலில் ஆர்வமுள்ள ஒரு பெண் காட்டன் புடவையில் தான் பொது இடங்களில் தன்னை காட்டிக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்கள். ஒரு பொய்யான பிம்பத்தை பிரதிபலிக்க நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் நானாகத்தான் இருப்பேன்.

    நீங்க சொல்லாதீங்க

    நீங்க சொல்லாதீங்க

    ஒவ்வொரு பெண்ணும் தனக்கு பிடித்த உடையை அணிவதற்கு முழு சுதந்திரம் உண்டு. நாங்க எந்த உடையை அணிய வேண்டும் என்று நீங்கள் எங்களுக்கு கற்றுத்தராதீர்கள் என்றார். மேலும், ஒரு பெரியாரிஸ்டாக நான், திரு. தீரத் சிங்கின் பேச்சை, கடுமையாக எதிர்க்கிறேன். நாங்கள் எதை உடுத்தவேண்டும் எனக் கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் எனக் சூடாக பதில் அளித்துள்ளார்.

    English summary
    Divya Sathyaraj condemns Uttarakhand Chief Minister Tirath Singh Rawat's speech
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X