தனிப்பட்ட வாழ்க்கை? இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க விஜய்.. திவ்யா சத்யராஜ்!
சென்னை: கடந்த ஆண்டு திமுவில் இணைந்த சத்தியராஜின் மகள் திவ்யா சத்யராஜ், திமுக சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கியுள்ளார். விஜய் அரசியல் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்து வரும் இவர், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயிடம் சில கேள்விகளை கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் சத்யராஜ். திராவிட கட்சிகளால் ஈர்க்கப்பட்ட சத்யராஜ் மேடைதோறும் பெரியார் கருத்துக்களையும் முழங்கி வருகிறார். சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் சினிமாவில் நடிகராக இருக்க, அவரது மகள் சினிமாவில் இருந்து விலகி, ஊட்டச்சத்து மருத்துவராக உள்ளார். இவர் உடல்நலம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஏராளமான வீடியோக்கள், கட்டுரைகளை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு திமுகவில் தன்னை இணைந்து கொண்ட இவர், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளராக உள்ளார்.

திவ்யா சத்யராஜ்: கரூர் துயர சம்பவத்தின் போது விஜய்யை கடுமையாக விமர்சித்த இவர், தற்போது வீடியோவில் சில கேள்விகளை கேட்டுள்ளார். அதில், விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது அன்ட் எத்திக். அதை நான் என்றைக்கும் செய்யமாட்டேன். ஆனால், அவரிடம் நான் இரண்டு கேள்விகளை கேட்க வேண்டும். ஒன்று நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு மக்களுக்காக என்ன செய்தீர்கள் என்பதை பட்டியலிட்டு மக்களிடம் சொல்ல வேண்டும். இதே கேள்வியை நீங்கள் என்னை பார்த்து கேட்கலாம். ஏனென்றால் நானும், அரசியலில் இருக்கிறேன்.
மக்களுக்காக என்ன பண்ணீங்க: நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, என் அம்மாவின் பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறேன். அந்த தொண்டு நிறுவனத்தின் மூலமாக வறுமை கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு, வைட்டமின் மாத்திரைகள், இரும்பு சத்து மாத்திரைகள் இவை அனைத்தும் கொடுத்துக் கொண்டு இருந்தேன். மற்றொரு விஷயம் பெரியாரை கொள்கை தலைவராக வைத்துக்கொண்டு, நீங்கள் பெண்களை, உங்கள் கட்சியில் இருக்கும் பெண்களை மிகவும் தவறாக பேசுகிறார்கள். பெண்களை தரக்குறைவாக பேசுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அதில் திமுக நிர்வாகி திவ்யா சத்யராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்


Click it and Unblock the Notifications











