Divya Sathyaraj: அரசியலில் குதிக்கப்போகும் சத்யராஜ் மகள்.. அன்னையர் தினத்துக்கு அப்பாவுக்கு வாழ்த்து
சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அப்பா சத்யராஜின் தோளில் சாய்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக வலம் வந்த நடிகர் சத்யராஜ் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் கட்டப்பாவாகவும் தீபிகா படுகோன், நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளுக்கு அப்பாவாகவும் நடித்து கலக்கி வருகிறார்.

1979ம் ஆண்டு மகேஸ்வரி சுப்பையா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட சத்யராஜுக்கு திவ்யா சத்யராஜ் என்கிற மகளும், சிபிராஜ் என்கிற மகனும் உள்ளனர். சிபிராஜ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், சத்யராஜின் மகள் நியூட்ரிஷியனாக பணியாற்றி வருகிறார். அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அப்பா பற்றி அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளன.
அப்பாவுக்கு அன்னையர் தின வாழ்த்து: அதில், "எல்கேஜி முதல் இருந்தே என்னுடைய நண்பராக சத்யா இருக்கிறார். என்னோட க்ரஷ்கள், பிம்பல், PMS பிரச்சனைகள் என அனைத்தையும் அறிந்தவர் அவர். என்னை விட வயதில் மூத்தவர். சற்றே உயர்ந்தவர். என் நினைவுக்கு தெரிந்து 7 வயதில் இருந்து அவரை என் குழந்தையாகவே பார்த்துக் கொண்டு வருகிறேன்.
உலகிலேயே சிறந்த மனிதனாக இந்த குழந்தை உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். ஆனால், ஒரு நாளும் என் அப்பா முன்பாக அழுததே கிடையாது. ஒருவேளை நான் அழுதால் என் அப்பா அதை பார்த்தால் உடைந்து போய்விடுவார்.
எனக்கான பக்க பலமாக அவர் இதுவரை இருந்து வருகிறார். நியூட்ரிஷியனாக இதுவரை என் பணியை ஆற்றி உள்ளேன். விரைவில் அரசியலிலும் ஈடுபட முடிவு செய்திருக்கிறேன். ஆனால், அரசியலில் களமிறங்கினாலும் எனக்கு என் குடும்பம் தான் எல்லாமே. என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் சூர்ய கிரகத்தின் வரிசையைக் கூட மாற்ற முயற்சிப்பேன். வாழ்க்கை எப்போதும் கடினமாக இருந்தாலும் கட்டப்பாவுடன் ஒரு காபி குடித்தால் போதும் அது என்னை உற்சாகப்படுத்தி முன்னேறி ஓட உதவும். "
அரசியலில் குதிக்கப்போகும் சத்யராஜ் மகள்

என தனது அப்பா சத்யராஜ் பற்றி பல விஷயங்களை பகிர்ந்த திவ்யா சத்யராஜ் கடைசியாக தனது அம்மா பற்றியும் சில வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்.
"எங்கள் வீட்டின் ராணியே எங்க அம்மா தான். உலகிலேயே சிறந்த அம்மா என்றே சொல்லலாம். அம்மா மற்றும் என் அப்பாவுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!" என திவ்யா சத்யராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து தான் அரசியலுக்கு வரப்போவதையும் அறிவித்துள்ளார்.

சுஜா வருணி, பவித்ரா லக்ஷ்மி, இந்திரஜா சங்கர், வாணி போஜன் உள்ளிட்ட பல நடிகைகள் திவ்யா சத்யராஜின் இந்த போஸ்ட்டுக்கு லைக் மற்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
அன்னையர் தினத்துக்கு நடிகைகள் தங்கள் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில், திவ்யா சத்யராஜ் அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அவரை பற்றி பேசியிருப்பது பல பிரபலங்களையும் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











