அவரெல்லாம் ஒரு போலி.. விஜய் - திரிஷாவை இணைத்து பேசிய நடிகரின் மகள்.. முடிவோடுதான் இருக்காரு

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கியிருக்கிறார் நடிகர் விஜய். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத அந்தக் கட்சி 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறது. அதனையொட்டி அவரது கட்சி தொண்டர்கள் இப்போதிருந்தே கள பணிகளில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி விஜய்யும் முழுமூச்சோடு அரசியல் பணிகளில் தனது கவனத்தை செலுத்துகிறார். முக்கியமாக திமுகவையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனமும் செய்கிறார்.

தமிழ் சினிமாவின் பெரிய ஹீரோக்களில் ஒருவரான விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்தார். அதில் அவருடன் பலர் நடித்திருந்தார்கள். கண்டிப்பாக ஹிட்டாகும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு படம் ஏமாற்றத்தையே கொடுத்தது. இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியையும் தொடங்கியிருக்கிறார் அவர். சினிமாவில் எப்படி தனது தாக்கத்தை ஆழமாக பதித்தாரோ அதேபோல் அரசியலிலும் செலுத்த முடிவெடுத்திருக்கிறார் அவர்.

ஆரம்பமே அதிரடிதான்: அதன்படி கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த வருடம் நடத்தினார். அதில் பேசியபோது திமுகவும், பாஜகவும்தான் தனது கட்சியின் எதிரிகள் என்று கூறினார். அதனையடுத்து அவர் ஏறிய மேடைகளில் எல்லாம் பாஜகவையும், திமுகவையும் தாக்கும் அவர் தமிழ்நாடு அரசை கொஞ்சம் ஓவர் டோஸாகவே தாக்கி பேசுகிறார். அதற்கு திமுகவினரும் தங்களால் முடிந்த பதிலடியை தொடர்ந்து கொடுத்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Divya Sathyaraj Slams Vijay And Trisha in Latest Meeting

கடுமையாக ட்ரோல் செய்யும் திமுக: ஆரம்பத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பெயரை ஓபனாக சொல்லாமல்தான் விமர்சித்துவந்தார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு நடந்த தவெகவின் முதல் பொதுக்குழுவில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பெயரை சொல்லி அழைத்து ஓபனாக விமர்சனம் செய்தார். அதுமட்டுமின்றி பெயரில் மட்டும் இருந்தால் போதாது செயலிலும் வேண்டும். 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களம் திமுக Vs தவெக என்றுதான் இருக்கும் என்றும் பேசியிருந்தார். இதனையடுத்து திமுகவினரும் தங்களது பதிலடியை மேற்கொண்டு காத்திரமாக முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

திவ்யா சத்யராஜ் பதிலடி: இந்நிலையில் திமுகவில் இணைந்திருக்கும் நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா விஜய்யை விமர்சனம் செய்திருக்கிறார். அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "ஏசி கேரவனில் அமர்ந்துகொண்டு சொகுசு விமானத்தில் ஃப்ரெண்டுடன் அமர்ந்து ஃப்ரெண்ட் திருமணத்துக்கு செல்லும் போலி அரசியல்வாதி உதயநிதி கிடையாது. அவர் கடினமாக உழைக்கக்கூடியவர். மழை, வெள்ளம் என எது வந்தாலும் நமக்காக களத்தில் இறங்கி வேலை செய்வார். பாஜகவிடமிருந்து தமிழ்நாட்டை காக்க வந்த மாமன்னன் உதயநிதி. அவரை எதிர்த்து யார் நின்றாலும் டெபாசிட் வாங்கமாட்டார்கள். அவர் வீழ்த்த முடியாத ஹீரோ.

கருணாநிதியின் ரசிகை: நான் கல்லூரியில் படிக்கும்போது நீங்கள் யார் ரசிகை என்று என்னிடம் கேட்டார். நான் கலைஞர் கருணாநிதியின் ரசிகை என்று பெருமையாக கூறினேன். இன்று ஒரு பெண்ணாக இங்கு நின்று நான் பேசுகிறேன் என்றால் அந்த தைரியத்தை எனக்கு கொடுத்தவர் கலைஞர் கருணாநிதிதான். அப்பா காசில்லாமல் சுயமாகத்தான் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணமும், தைரியமும் வந்ததற்கு அவர்தான் காரணம்" என்றார். அவரது இந்தப் பேச்சு விஜய் ரசிகர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X