twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாய் பல்லவியை மிரட்டுவதா? கொதித்தெழுத்த ரம்யா.. என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க!

    |

    பெங்களூரு: நடிகையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான திவ்யா ஸ்பந்தனா எனும் ரம்யா நடிகை சாய் பல்லவியின் சமீபத்திய கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    2க்கும் வித்தியாசம் இல்ல.. Hindutva பற்றி பேசிய Sai Pallavi.. *Politics

    கடந்த 3 நாட்களாக தொடர்ந்து #SaiPallavi ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

    விராட பர்வம் படத்தின் புரமோஷனை முன்னிட்டு அளித்த பேட்டியின் போது காஷ்மீர் பண்டிதர்கள் கொலையையும் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் அவர் ஒப்பிட்டு பேசியது தான் இந்த சர்ச்சைக்கே காரணம்.

    அங்க காஷ்மீர் பண்டிட்கள்.. இங்க இஸ்லாமியர்கள்.. சாய் பல்லவி ஓப்பன் டாக்!அங்க காஷ்மீர் பண்டிட்கள்.. இங்க இஸ்லாமியர்கள்.. சாய் பல்லவி ஓப்பன் டாக்!

    காஷ்மீர் ஃபைல்ஸ்

    காஷ்மீர் ஃபைல்ஸ்

    இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் நடிப்பில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் காஷ்மீரில் 90களில் காஷ்மீரி பண்டிதர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை படமாக இயக்கி இருந்தார். பாலிவுட் ரசிகர்கள் அந்த படத்துக்கு கொடுத்த வரவேற்பின் காரணமாக படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாஜகவுக்கு ஆதரவுமாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் அந்த படம் உருவாக்கப்பட்டதாக விமர்சனங்கள் குவிந்தன.

    ஒப்பிட்ட சாய் பல்லவி

    ஒப்பிட்ட சாய் பல்லவி

    விரைவில் வெளியாக உள்ள விராட பர்வம் படத்திற்கான புரமோஷன் பேட்டியில் கலந்து கொண்ட சாய் பல்லவி ஒரு கேள்விக்கு சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்த்தேன். அதில் சொல்லப்படுவது போல காஷ்மீர் பண்டிதர்கள் அங்குள்ள இஸ்லாமியர்களால் கொல்லப்படுகிறார்கள் என்றால், அதே போலத்தன் இந்தியாவின் ஒரு பகுதியில் அதிலும் கோவிட் காலத்தில் மாடுகளை கொண்டு சென்ற ஒரு இஸ்லாமியரை சில இந்துக்கள் ஜெய்ஸ்ரீராம் சொல்லு என சித்ரவதை செய்தனர். மதத்தின் பெயரால் எங்கேயும் யாருக்கும் எந்தவொரு தொல்லையும் கொடுக்க கூடாது என்பது தான் தனது கருத்து என்று பேசினார்.

    மிரட்டல்

    மிரட்டல்

    சாய் பல்லவியின் பேச்சு பாஜகவினருக்கு எதிரான பேச்சு என்றும் இந்து மதத்திற்கு எதிரான கருத்து என்றும் பலர் அவரை ட்ரோல் செய்யத் தொடங்கினர். அவர் சொன்னதில் எந்தவொரு தவறுமில்லை. சொந்த கருத்தை சொல்ல அவருக்கு முழு உரிமை உள்ளது என ஆதரவுகளும் குவிந்தன. நடிகை சாய் பல்லவிக்கு தனிப்பட்ட முறையில் மிரட்டல்களும் வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ரம்யா ஆதரவு

    ரம்யா ஆதரவு

    இந்நிலையில், சிம்புவுடன் 'குத்து' படத்தில் நடித்த நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் சாய் பல்லவி சொன்னது முற்றிலும் உண்மை என்றும், அவருக்கு யாரும் மிரட்டல் விடக் கூடாது என்றும், அவரை ட்ரோல் செய்யவும் கூடாது என்றும், தனது முழு ஆதரவு அவருக்கு உண்டு என ட்வீட் போட்டுள்ளார்.

    அன்பா இருக்க சொன்னது தப்பா

    அன்பா இருக்க சொன்னது தப்பா

    அனைவரும் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும். மதத்தின் பெயரால் இங்கே யாருக்கும் தீங்கு நேரக் கூடாது என தனது கருத்தை சாய் பல்லவி சொன்னது தப்பா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார் ரம்யா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான நீங்கள் ஆதரவு தருவது ஆச்சர்யமில்லை என அவரையும் சேர்த்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

    English summary
    Divya Spandana aka Ramya tweeted, The trolling & threats to Sai_Pallavi92 must stop.Everyone is entitled to an opinion or is it that women alone aren’t?What she has said is what any decent human being would say- to be kind & to protect those who are oppressed. One can disagree with someone without being abusive."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X