பிரம்மச்சாரியும் இல்ல.. தாத்தாவும் இல்ல.. மனம் திறந்த சர்ச்சை ஜோடி திவ்யா மற்றும் கிறிஸ்!

சென்னை: சோஷியல் மீடியாவில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது மலையாள நடிகையான திவ்யா ஸ்ரீதர் மற்றும் கிறிஸ் வேணுகோபால் திருமணம் செய்து கொண்டது தான். 40 வயதான நடிகை தாத்தாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என இணையத்தில் இவர்கள் இருவரையும் ரசிகர்கள் கண்டபடி ட்ரோல் செய்து வருகின்றனர். தற்போது இவர்கள் இருவரும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு மனம் திறந்து பேட்டி அளித்துள்ளனர்

மலையாள நடிகையான திவ்யா ஸ்ரீதர் 'பத்தரமாட்டு’ தொடரில் நடித்துக்கொண்டு இருந்த போது, தன்னுடன் நடித்த கிறிஸ் வேணுகோபாலை அக்டோபர் 30ந் தேதி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குருவாயூர் கோவிலில் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் டிரெண்டானதை தொடர்ந்து இது என்ன அறுபதாவது திருமணமா? என்று இவர்களை இணையவாசிகள் ட்ரோல் செய்தனர்.

kris venugopal divya sridhar interview

நல்ல தந்தை: இதற்கு பதிலடி கொடுத்த நடிகை திவ்யா ஸ்ரீதர், இணையத்தில் பரவி வரும் விமர்சனத்தை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. கிறிஸ் வேணுகோபாலுக்கு 49 வயதாகிறது, எனக்கு 40 வயதாகிறது. செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை, இப்போது என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தந்தை கிடைத்து இருக்கிறார். வயதை காரணமாக காட்டி பேசுபவர்கள் பேசட்டும். ஆயிரம் குடங்களில் வாயை மூடிவிடலாம். ஆனால் ஒரு மனிதரின் வாயை அடைக்க முடியாது என்று சரியான பதிலடி கொடுத்து இருந்தார்.

நான் தாத்தா இல்ல: நடிகை திவ்யா திருமணம் குறித்து சரியான விளக்கம் கொடுத்த போதும், இவர்கள் குறித்த விமர்சனம் இணையத்தில் பரவியதை அடுத்து திவ்யா ஸ்ரீதர் மற்றும் கிறிஸ் வேணுகோபால் இருவரும் இணைந்து சினிஉலகம் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில் பேசிய கிறிஸ், தாத்தா நடிகர் சிறு வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லுகிறார்கள். நான் தாத்தா இல்லை, தாத்தா வேஷம் போடுகிற நடிகர் தான் நான். ஆஹா கல்யாணம் படத்தில் எப்படி தாத்தா வேஷம் போட்டேனோ அப்படித்தான் மலையாள சீரியலிலும் தாத்தா வேஷம் போட்டு நடித்தேன். ஆனால் என்னை 90 வயசு தாத்தா என்கிறார்கள் அப்படி எல்லாம் இல்லை எனக்கும் திவ்யாவிற்கும் 9 வயது வித்தியாசம் தான்.

நான் பிரம்மச்சாரியா: அதே போல இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படி எல்லாம் இல்லை என் குடும்பத்தில் அம்மா, அப்பா என அனைவரின் முன்னிலையிலும் குருவாயூர் கோவிலில் திருமணம் நடந்தது. இது எப்படி ரகசிய திருமணமாகும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இணையத்தில் நித்திய பிரம்மச்சாரியை கல்யாணம் செய்து கொண்டார் என்று கதை கதையா சொல்லுறாங்க, நான் பிரம்மச்சாரி இல்ல, நான் ஒரு இன்ஜினியர் 14 வருஷமாக மீடியாவில் தான் இருக்கிறேன். இப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் எங்கள் இருவரின் திருமணம் குறித்து பல விஷயத்தை சொல்லுகிறார்கள்.

ஏற்கனவே திருமணமாகி 2022ம் ஆண்டு விவாகரத்து நடந்து இருவரும் பிரிந்து விட்டோம். அப்போது, திவ்யாவும் தனிமையில் இருந்ததால், இருவரும் பேசிவிட்டு, குழந்தைகளிடம் பேசிவிட்டுத்தான் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் திருமணம் செய்து கொண்டதில் யாருக்கு என்ன பிரச்சனை என்று அந்த பேட்டியில் கிறிஸ் வேணுகோபால் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X