அமெரிக்காவில் இருந்து.. தனது குழந்தையின் போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகை.. வாழ்த்தும் ரசிகர்கள்!
டெக்சாஸ்: அமெரிக்காவில் பிறந்த தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் பிரபல நடிகை. இந்தப் போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் திவ்யா உன்னி. ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழில், சபாஷ், கண்ணன் வருவான், பாளையத்து அம்மன், வேதம், ஆண்டான் அடிமை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கருத்து வேறுபாடு
இவர் பிரபல நடன கலைஞரும் ஆவார். பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் உட்பட பல்வேறு நடனங்களை கற்றுள்ளார். நடனத்துக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். சுதிர் சேகர் என்பவரை கடந்த 2002 ஆம் ஆண்டு இவர் திருமணம் செய்தார். இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

அமெரிக்காவில் செட்டில்
பிறகு அருண் குமார் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார் திவ்யா. ஹூஸ்டன் நகரில் ஶ்ரீபடம் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். அங்கு பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகினியாட்டம் ஆகிய நடனங்களை கற்றுக் கொடுத்து வருகிறார். இந்நிலையில், நடிகை திவ்யா உன்னி அமெரிக்காவில் தனக்கு நடந்த வளைகாப்பு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

பெண் குழந்தை
அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. எங்களுக்கு புதிய இளவரசி பிறந்துள்ளார். ஐஸ்வர்யா என்று பெயர் வைத்துள்ளோம். உங்கள் அன்பையும் ஆசிர்வாதத்தையும் எதிர்பார்க்கிறோம்' என்று கூறியிருந்தார். பிறகு குழந்தை இரண்டு மாதமாக இருந்தபோது, போட்டோவை வெளியிட்டிருந்தார். இது இரண்டு மாத குழந்தைதான். ஆனால், போட்டோவுக்கு எப்படி போஸ் கொடுக்க வேண்டும் என்பது தெரிகிறது' என்று கூறி இருந்தார்.

புதிய போட்டோ
இந்நிலையில் இப்போது குழந்தை ஐஸ்வர்யாவின் புதிய போட்டோக்களை பதிவிட்டுள்ளார். பரத நாட்டிய உடையில் இருக்கும் திவ்யா, குழந்தையை தூக்கி வைத்திருக்கிறார். போட்டோவுக்கு செமயாக போஸ் கொடுத்திருக்கிறது குழந்தை. இதையடுத்து பல நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஒருவர் அம்மாவின் சாயல் அப்படியே இருக்கிறது என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











