ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி வாழ்க்கையை நான் கெடுத்தேனா?.. பொண்ணுங்க கூட திட்டுறாங்க.. திவ்யபாரதி ஓபன்!

சென்னை: பாடகி சைந்தவியை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். 7 ஆண்டுகள் கழித்துத்தான் அவர்களுக்கு 2020ம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அன்வி என பெயர் சூட்டி வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், திடீரென கடந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இருவரும் ஒருவரையொருவர் பிரிவதாக அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பேச்சுலர் படத்தில் நடித்ததில் இருந்துதான் ஜி.வி. பிரகாஷ் குமார் சரியில்லை என்றும் மீண்டும் கிங்ஸ்டன் படத்திலும் அதே ஹீரோயினை ஜோடியாக்கியுள்ளார். இவங்க வாழ்க்கையை கெடுத்ததே திவ்யபாரதி தான் என ஏகப்பட்ட ட்ரோல்கள் சோஷியல் மீடியாவில் புகைந்து வருகின்றன.

divyabharathi gv prakash kumar saindhavi

இந்நிலையில், முதல்முறையாக அதுகுறித்து நடிகை திவ்யபாரதியே வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

பேச்சுலர் ஹீரோயின்: ஜி.வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்த படங்களில் அவருக்கு டார்லிங் படத்தை விட அதிக ரெஸ்பான்ஸை ரசிகர்கள் மத்தியில் கொடுத்த படம் என்றால் அது பேச்சுலர் படம் தான். அந்த படத்தின் டீசர் வெளியான போதே சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்று ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்தது. அந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்யபாரதி. அந்த படத்திற்கு பிறகு மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக கேமியோ ரோல் போல நடித்த அவர், கிங்ஸ்டன் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். தெலுங்கில் கோட் எனும் படத்திலும் நடித்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் - சைந்தவி விவாகரத்து: 4 வயது அன்வி குழந்தை இருக்கும் போது திடீரென அம்மா சைந்தவியும் அப்பா ஜி.வி. பிரகாஷ் குமாரும் ஒருவரையொருவர் பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்தது கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏ.ஆர். ரஹ்மானின் மருமகனா இப்படி விவாகரத்தை அறிவித்தார் என பலரும் பேசி முடிப்பதற்குள் ஏ.ஆர். ரஹ்மானே விவாகரத்தை அறிவித்ததும் ஜி.வி. பிரகாஷின் விவாகரத்து பற்றிய சர்ச்சைகள் அடங்கியிருந்தன.

divyabharathi gv prakash kumar saindhavi

நானா கெடுத்தேன்: விவாகரத்துக்கு பிறகு மீண்டும் ஜி.வி. பிரகாஷ் சார் மற்றும் சைந்தவி மேம் இணைந்து கச்சேரிகளை நடத்துவதை பார்க்கவே ரொம்ப ஹேப்பியா இருக்கு. அவங்க ரெண்டு பேரும் இணைந்து பாடிய "பிறை தேடும் இரவிலே" பாடல் எல்லாம் என்னோட ஆல்டைம் ஃபேவரைட். இனிமேல் நம்மை யாரும் போட்டு அடிக்க மாட்டாங்க, டார்கெட் பண்ண மாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனால், இப்போதான் அதிகமா அசிங்கப்படுத்துறாங்க. அவங்க ரெண்டு பேரும் சூப்பர் ஜோடி என்றும் அவங்க வாழ்க்கையையே நான் தான் கெடுத்து விட்டேன் என பெண்களே அதிகம் திட்டி வருகின்றனர். அதையெல்லாம் கேட்கும் போதும், படிக்கும் போதும் எந்தவொரு ரிப்ளையும் பண்ணாமல் கடந்து சென்று வருகிறேன் என திவ்யபாரதி வெளிப்படையாக பேசியுள்ளார்.

தாராள கவர்ச்சி: 33 வயதாகும் நடிகை திவ்யபாரதி தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இன்ஸ்டாகிராம் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தான். அவரது தாராள கவர்ச்சி போட்டோக்களுக்கு எல்லாம் எக்கச்சக்க ஹார்ட்டீன்களை ரசிகர்களை குவித்து வருகின்றனர். நீச்சல் உடைகளிலும், கவர்ச்சி ஆடைகளை அணிந்தும் அட்டகாசமாக போஸ் கொடுத்து ஈர்த்து வருகிறார். இதுபோன்ற நெகட்டிவ் கமெண்ட்டுகளும் அவரை தொல்லை செய்தாலும் அதையெல்லாம் கடந்து சென்று விடுவதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X