கண்ணடிச்சு கிறங்கடிக்கிறாங்களே.. தொகுப்பாளினி டிடியின் ட்ரெண்டிங் வீடியோ.. ரசிகர்கள் சொக்கிட்டாங்க

சென்னை: டிடி என்கிற திவ்யதர்ஷினி விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்திருக்கும் அவர் வளர்ந்த பிறகும் சில படங்களில் நடித்தார். இருந்தாலும் ஆங்கரிங்தான் அவரை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் தற்போது பகிர்ந்திருக்கும் வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது

நளதமயந்தி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் திவ்யதர்ஷினி தொகுப்பாளினியாகத்தான் ஃபேமஸ் ஆனார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகளை அவரே ஆங்கரிங் செய்துகொண்டிருந்தார். தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில் கில்லாடி டிடி. அவர் வருவதாலேயே சில நிகழ்ச்சிகளை ரசிகர்கள் தவறாமல் பார்ப்பது வழக்கம்.

தமிழ்நாடு முழுவதும் ஃபேமஸ்: சின்னத்திரையில் பணியாற்றி ஏராளமானோர் தமிழ்நாடு முழுவதும் ஃபேமஸ் ஆகியிருக்கிறார்கள். அந்த லிஸ்ட்டில் டிடியும் ஒருவர். ஏகப்பட்ட பேர் அவரது ரசிகர்களாக இருக்கிறார்கள். சாமானியர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் அவரது ஆங்கரிங் ஸ்டைலை பாராட்டியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் டூ விவாகரத்து: இது ஒருபக்கம் இருக்க ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை கடந்த 2017அம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் டிடி. அவர்களது திருமணத்துக்கு வெள்ளித்திரை பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு சில காலம் அவர்களது வாழ்க்கை சுமூகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விவாகரத்துக்கு வழி வகுத்தது.

Divyadarshini s Trending Reel Video Goes Viral Fans Praise DD s Stylish Look
Photo Credit:

சிங்கிள்தான்: ஸ்ரீகாந்த்தும், டிடியும் பிரிந்ததற்கு யூகங்களாக பல காரணங்களை பலரும் சொன்னார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் அந்த விவகாரத்தை மௌனமாக கடந்துவிட்டார்கள். ஸ்ரீயை பிரிந்த டிடி இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருக்கு வயது 40 என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது அவரின் ரசிகர்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.

ட்ரெண்டாகும் வீடியோ: ஆனால் இப்போதைக்கு அவர் திருமணம் செய்துகொள்ளும் மைண்ட் செட்டில் இல்லை என்றே தெரிகிறது. தற்போது ஆங்கரிங்கிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக விலகியிருக்கும் அவர்; சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவ்வாக இருப்பவர். இந்நிலையில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆங்கில பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ ரிலீஸ் செய்திருக்கும் அவர் ஸ்டைலா இருக்கா என்று கேள்வி கேட்டு கேப்ஷனையும் போட்டிருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் அவர் கண்ணடிப்பதை பார்த்த ரசிகர்கள், அட செம அழகாக கண்ணடிக்கிறாங்களே என்று கமெண்ட்ஸும் செய்து அதை ட்ரெண்டாக்கிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X