Diwali 2023: இந்த தீபாவளி ரேஸில் வெல்லப் போவது யாரு?.. 3 படங்கள் சும்மா மல்லுக்கட்டுதே!

சென்னை: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இந்தியன் 2, கங்குவா, விடாமுயற்சி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

சிவகார்த்திகேயனின் ஏலியன் படமான அயலான் கூட அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சென்று விட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி விடுமுறையை குறிவைத்து நடிகர் கார்த்தி, ராகவா லாரன்ஸ் மற்றும் விக்ரம் பிரபு மூன்று பேருமே போட்டிப் போட களத்தில் இறங்கி உள்ளனர்.

Diwali 2023 clash movies: Jigarthanda Double X and Japan grabs more fans attention

ஜப்பான்: இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல் நடித்த ஜப்பான் திரைப்படம் லலிதா ஜுவல்லரியில் நடந்த திருட்டை மையமாக வைத்து முருகன் என்பவரின் வாழ்க்கையை சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் கார்த்தி இதுவரை தீபாவளி கிளாஷ் விட்டு தோற்றதே இல்லாத நிலையில், அவரது 25வது படம் வித்தியாசமான நடிப்பு மற்றும் ஸ்லாங்கிற்காகவே ஓடும் என தெரிகிறது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: டிரெய்லரிலேயே மிரட்டிய கார்த்திக் சுப்புராஜ் தியேட்டரிலும் தீபாவளிக்கு சரவெடியை கொடுப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஜிகர்தண்டா படம் ஹிட் அடித்த நிலையில், ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு எதிராக செம போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெய்டு: இதற்கு நடுவே விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகி உள்ள போலீஸ் படமான ரெய்டு இந்த தீபாவளிக்கு வெளியாகிறது. நாளை வெளியாகும் இந்த மூன்று படங்களில் எந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்து இந்த தீபாவளியை மக்கள் தியேட்டரில் கொண்டாட கிளம்ப போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டைகர் 3: இது தவிர சல்மான் கான் நடிப்பில் உருவாகி உள்ள இந்தி படமான டைகர் 3 திரைப்படம் வித்தியாசமாக ஞாயிற்றுக்கிழமை தீபாவளிக்கே வெளியாகிறது. கத்ரீனா கைஃப்பின் டவல் ஃபைட்டை பார்க்கவே ரசிகர்கள் அந்த படத்துக்கு படையெடுப்பார்கள் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X