தீபாவளிக்கு தியேட்டர் எல்லாம் காத்து வாங்கும் போல.. ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முதல் நாளே?
சென்னை: புக் மை ஷோவில் முதல் நாளே ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களுக்கான டிக்கெட் புக்கிங் எந்தவொரு காட்சிக்கும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் கூட ஹவுஸ்ஃபுல் ஆகாமல் பச்சை நிறத்தில் பரிதாபத்திற்குரிய நிலைமையில் உள்ளன.
இந்த தீபாவளி பண்டிகையை எந்தவொரு பெரிய நடிகர்களும் பெரிதாக கண்டுக் கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டனர் என்று தான் தெரிகிறது.

கடந்த ஆண்டு தீபாவளி நிலைமை இப்படி தான் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு வெளியாகி உள்ள இரு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், எல்லாருமே தியேட்டருக்கு பதில் சொந்த ஊருக்குத்தான் டிக்கெட் எடுப்பார்கள் என தெரிகிறது.
ஜப்பான் ஜெயிக்குமா?: ஜப்பான் படத்திற்கு முதல் ஷோவில் இருந்தே ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஆளவிடுங்கடா சாமி என ரசிகர்கள் தெறித்து ஓடி வருகின்றனர். கார்த்தி நல்லா நடிச்சிருந்தாலும், ஜிப்ஸி படத்தைத் தொடர்ந்து ராஜு முருகன் இந்த படத்திலும் ஸ்க்ரிப்ட்டில் கோட்டை விட்டு விட்டார் என்றே தெரிகிறது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கும் கலவையான விமர்சனங்கள் தான் குவிந்து வருகின்றன. படம் தீபாவளிக்கான சரவெடி படமாக இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. முதல் நாளிலேயே பெரியளவில் டிக்கெட் புக்கிங் நடைபெறாமல் உள்ள நிலையில், வசூல் ரொம்பவே அடிவாங்கும் என தெரிகிறது.
சிறப்பு காட்சி வேற: புக் மை ஷோ உள்ளிட்ட டிக்கெட் புக்கிங் தளங்களில் இன்று மாலை 6 மணி, 10 மணி காட்சிகள் எல்லாமே பச்சை நிறமே பச்சை நிறமே என பல்லைக் காட்டி வரும் நிலையில், தீபாவளிக்கு இன்னும் மோசமாக டிக்கெட் புக்கிங் இருக்கும் என்றே கணிப்புகள் வெளியாகி உள்ளன. விக்ரம் பிரபுவின் ரெய்டு படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஜெயிலர், லியோ படத்துக்கெல்லாம் முதல் நாள் மட்டுமின்றி முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகளே கிடைக்காமல் இருந்த நிலையில், இந்த தீபாவளிக்கு தியேட்டர் நிலைமை ரொம்பவே மோசமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு இதற்கு மேல் பெரிய படம் என்றால் அது பிரபாஸின் சலார் மட்டும் தான்.
தீபாவளி வின்னர் யாரு?: இன்று வெளியான 3 படங்களில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மட்டும் கொஞ்சம் தப்பிக்கும் என்கின்றனர். ஆனால், தீபாவளி வின்னர் அளவுக்கு பில்டப் எல்லாம் இருக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி தான்.


Click it and Unblock the Notifications











