Diwali 2023: ரஜினி, கமல் முதல் சிவகார்த்திகேயன் வரை... தீபாவளி வாழ்த்துச் சொன்ன பிரபலங்கள்!
சென்னை: நாடு முழுவதும் இன்று தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டி வருகிறது.
கோலிவுட் திரை பிரபலங்களும் அவர்களது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கமல்ஹாசன், விக்ரம், சிவகார்த்திகேயன் என ஏராளமான பிரபலங்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர்.

பிரபலங்கள் தீபாவளி வாழ்த்து: நாடு முழுவதும் பொதுமக்கள் உற்சாகத்துடன் தீபாவளி கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கிடா, ரெய்டு ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் திரையுலக பிரபலங்களின் தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது. படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் டீசர் தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. இதனையடுத்து லால் சலாம் டீசரை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ரஜினி, "அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள், வரும் பொங்கல் அன்னைக்கு லால் சலாம் படத்தில் உங்களை சந்திக்கிறேன்.. மொய்தீன் பாய்" என சல்யூட் அடித்து ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளார்.

அதேபோல், உலகநாயகன் கமல்ஹாசனும் தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், "விடிவானில் ஒளிர்மீன்கள்
விண்ணெல்லாம் ஒளிரட்டும்
ஐப்பசியின் மழைப்பொழிவில்
அகமெல்லாம் மலரட்டும்
ஆகாயம் பார்த்திருக்கும்
அருமைநிலம் செழிக்கட்டும்
தீபாவளி நாளில்
திசையெட்டும் பொலியட்டும்." என கவிதையாக வாழ்த்தியுள்ளார்.

சீயான் விக்ரம் தனது டிவிட்டரில் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில், "தித்திக்கும் இனிப்பு வகைகளும்.... மனதை மயக்கும் புது வண்ணவுடைகளும்... பட படவென வெடிக்கும் பட்டாசுகளும்... அனைவரின் முகமும் சந்தோஷத்தில் மின்னிட... இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என் சந்தோஷங்களே!!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கார்த்தி தனது டிவிட்டரில் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதேபோல், டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா தனது மகனுடன் செல்ஃபி வீடியோவில் தீபாவளி வாழ்த்துக் கூறியுள்ளார்.
அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஃபேமிலி போட்டோவை டிவிட்டரில் ஷேர் செய்து தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











