Kavin: ஸ்டார் படத்தில் எடிட்டர் வேலை செய்த கவின்.. ஆடியன்ஸ் பல்ஸ சரியாக கணித்ததாகவும் பெருமிதம்!
சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில், கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ப்ளடி பெக்கர். இப்படத்தினை நெல்சன் திலீப்குமாரின் உதவி இயக்குநர் சிவபாலன் இயக்கியுள்ளார். படத்தின் புரோமசன் வேலைகள் சிறப்பாக சென்றுகொண்டு உள்ளது. படத்தில் ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் வெளியாகும் முதல் படமே தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் புரோமோஷனில் கலந்து கொண்டபோது தனது கடைசிப் படமான ஸ்டார் படம் குறித்தும் நடிகர் கவின் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சின்னத்திரையில் நடித்துக் கொண்டு இருந்த கவின் தனது அயராத உழைப்பால் இன்றைக்கு வெள்ளித்திரையில் நாயகனாக வலம் வருவது மட்டும் இல்லாமல், ஒரு பிராமிசிங் ஆக்டராக உருவாகியுள்ளார். இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் குறிப்பிட்ட அளவில் இருந்தாலும், தன்னை நம்பி பணம் செலவளிக்கும் தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கையான நடிகராகவும் வலம் வருகின்றார். குறிப்பாக ரசிகர்களுக்கு "அட நம்மள மாதிரியே இருக்கானேப்பா இந்த பையன்" என்ற உணர்வை கவின் கடத்திவிடுகின்றார்.

டாடா படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த கவின் அதை அடுத்து ஸ்டார் படத்தில் நடித்திருந்தார். ஸ்டார் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அந்த படம் கவினுக்கு நடிப்பிற்கான பாராட்டுகளைப் பெற்று தந்தது. மே மாதம் 10ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இந்த படம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெற்றிகரமாக ஓடி, கிட்டத்தட்ட ரூபாய் 25 கோடி வசூல் செய்தது. கவின் பிராமிசிங் ஆக்டராக உருவாகியுள்ளார். இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் குறிப்பிட்ட அளவில் இருந்தாலும், தன்னை நம்பி பணம் செலவளிக்கும் தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கையான நடிகராகவும் வலம் வருகின்றார்.

ஸ்டார்: இந்நிலையில் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ள பிளடி பெக்கர் படத்தின் புரோமோஷன் வேலைகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் கவின், பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அப்போது தனது நடிப்பில் இதற்குமுன்னர் ரிலீஸ் ஆன ஸ்டார் படம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில், ஸ்டார் படத்தினை முதலில் பார்த்துவிட்டு படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக தெரிவித்ததாகவும் அதனை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

20 நிமிடக் காட்சிகள்: மேலும் படத்தில் இருந்த காட்சிகள் அனைத்தும் சிறப்பான காட்சிகள் என்றாலும் அவை படத்தின் திரைக்கதையில் இருந்து கொஞ்சம் வெளியில் செல்வதைப்போல் இருந்தது. அதனால் நான் அவற்றை நீக்கச் சொன்னேன். படத்தின் கதை கேட்கும்போது எனக்குப் பிடித்ததால்தான் நடித்தேன். படத்தின் நீளம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் 20 நிமிட காட்சிகளை நீக்கச் சொன்னேன். ஆனால் படக்குழுவினர் நம்பிக்கையோடு இருந்தனர். இறுதியில் நான் கூறியதுதான் நடந்தது" எனக் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications











