Bloody Beggar:ப்ளடி பெக்கரை ஷார்ட் & ஸ்வீட்டா பாராட்டிய LCU லோகேஷ்.. என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?

சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில், கவின் நடிப்பில் வெளியான படம் ப்ளடி பெக்கர். இப்படத்தினை நெல்சன் திலீப்குமாரின் உதவி இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ்க்கு முன்னரே, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. மேலும் படத்தின் ட்ரைலர் முழுக்க முழுக்க ஜனரஞ்சகமாக இருந்ததும் ரசிகர்களுக்கு இந்தப்படத்தின் மீது, தனி எதிர்பார்ப்பு ஏற்பட முக்கிய காரணம் எனலாம். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

நடிகர் கவின், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய அதேநேரத்தில் பலரது கவனத்தினை ஈர்த்த நடிகராக வலம் வருகின்றார். இவரது கடைசி இரண்டுப் படங்களான டாடா மற்றும் ஸ்டார் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இரண்டு படங்களிலும் சென்டிமென்ட் காட்சிகள் சிறப்பாக ஒர்க்-அவுட் ஆனதால், கவினுக்கு அடுத்தடுத்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. மேலும் அந்த இரண்டு படங்களும் கதையாகவும் பாராட்டுகளைப் பெற்றதால், கவின் சிறப்பான கதைகளைத் தேர்வு செய்து நடிக்கின்றார் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஏற்படுத்திவிட்டார்.

bloody beggar kavin

ப்ளடி பெக்கர்: இந்நிலையில் இவர் நடித்துள்ள ப்ளடி பெக்கர் படமும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். அதேநேரத்தில் படத்தினை டார்க்- காமெடியில் நகர்த்த முயற்சி செய்துள்ளனர். படம் பார்த்த ரசிகர்களுக்கு டார்க் காமெடி அந்த அளவிற்கு ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும், அது படத்தினை பாதிக்கவில்லை எனலாம். ஒட்டுமொத்தமாக படம் ரசிக்கும்படியாக அமைந்தது.

bloody beggar kavin

லோகேஷ் கனகராஜ்: படம் பார்த்த பலரும் படம் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து படம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் படம் பார்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். படம் பார்த்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ், " நான் இப்போதுதான் ப்ளடி பெக்கர் படம் பார்த்தேன். படம் சூப்பராக உள்ளது. இது போன்ற படங்களை நான் ஹாலிவுட்டில்தான் பார்த்திருக்கின்றேன். தமிழில் பார்த்ததில்லை.

bloody beggar kavin

கவின் நடிப்பு: படம் எனக்கு ரொம்பவே பிடித்துள்ளது. எமோஷ்னல் சீன் எல்லாம் மெனக்கெடலே இல்லாமல் கவின் நடித்துள்ளார். ஆனால் அதற்குப் பின்னால் எவ்வளவு உழைப்பு உள்ளது என எனக்குத் தெரியும். இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. கண்டிப்பாக எல்லோரும் பார்க்கவேண்டும். கவின், முதல் முறையாக தயாரிப்பாளராக மாறியுள்ள நெல்சன், படத்தின் இயக்குநர் சிவபாலன் முத்துகுமார், படத்தின் நடித்த ரெடின் கிங்ஸ்லி என அனைவருக்கும் பாராட்டுகள்" என பேசினார். அப்போது உடன் இருந்த படத்தின் தயாரிப்பாளரான நெல்சன் நன்றி கூறினார்.

bloody beggar kavin

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X