Diwali 2024: அமரன் தொடங்கி பூல் புலைய்யா 3 வரை.. இந்தியா முழுவதும் தீபாவளி ரிலீஸ் படங்களின் பட்டியல்
சென்னை: திரையுலகைப் பொறுத்தவரையில் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை என மிகவும் முக்கியமான நாட்களில் குறிப்பாக மக்கள் குடும்பத்துடன் கொண்டாடும் விழா நாட்களைக் குறிவைத்து படங்களை ரிலீஸ் செய்து, வசூலை அள்ள பிளான் போடுவார்கள். அந்த வகையில் மாநிலத்திற்கு மாநிலம் ஒருசில விழாக்கள் மாறுபடும். இதில் இந்தியா முழுவதும் (கேரளாவைத் தவிர) கொண்டாடப்படும் விழா என்றால் அது தீபாவளி. அனைத்து திரையுலகமும் தீபாவளிக்கு படங்களை ரிலீஸ் செய்ய முன்னரெ முடிவு செய்திருப்பார்கள். இந்நிலையில் 2024ஆம் ஆண்ட்உ தீபாவளிக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
அமரன்: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் புரடெக்ஷன்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

பிரதர்: ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குநர் ராம். ராஜேஸ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் பூமிகா, நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள மக்கா மிஷி பாடல் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

ப்ளடி பெக்கர்: இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில், கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ப்ளடி பெக்கர். இப்படத்தினை நெல்சன் திலீப்குமாரின் உதவி இயக்குநர் சிவபாலன் இயக்கியுள்ளார். படத்தின் புரோமசன் வேலைகள் சிறப்பாக சென்றுகொண்டு உள்ளது. படத்தில் ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் வெளியாகும் முதல் படமே தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

ஜீப்ரா: சத்யராஜ், பிரியா பவானி சங்கர், ஊர்வசி ரவ்துலா, சுனில், சத்யதேவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜீப்ரா. நேரடி தெலுங்குப் படமான இந்தப் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். இப்படம் தெலுங்கில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

லக்கி பாஸ்கர்: துல்கர் சல்மான் மற்றும் மீனாட்சி சௌத்ரி நடிப்பில் உருவாகியுள்ள படம் லக்கி பாஸ்கர். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை வாத்தி படட்தினை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ஏற்கனவே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பைக் கூட்டிய நிலையில், படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையில் இந்த தீபாவளிக்கு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின்றது.
கா: சுதீப் மற்றும் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கா. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின்றது. நேரடி தெலுங்குப் படமான இதில் கிரண் அப்பாவரம் கதாநாயகனாகவும், தன்வி ராம் மற்றும் நயன் சரிகா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின்றது.
பகீரா: பகீரா நேரடி கன்னடப் படம் ஆகும். இப்படத்தில் ஸ்ரீ முரளி, பிரகாஷ் ராஜ், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை டி.ஆர். சூரி இயக்கியுள்ளார். படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.
பூல் பூலைய்யா 3: இந்தியில் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல வசூல் செய்தது. இதனால் பூல் பூலைய்யா படத்தின் மூன்றாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என படக்குழு நம்புகின்றது. அனீஸ் பஸ்மி இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி ஆர்யன் நடித்துள்ளார். இப்படம் தீபாவளுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.



Click it and Unblock the Notifications











