Bison Vs Dude Vs Diesel Box Office Day 1: முதல் நாளே பந்தயத்தில் வென்றது எந்த படம்? கோடிகளை அள்ளுறாங்களே!

சென்னை: இந்த ஆண்டு தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளதை திரைத்துறையில் இருக்கும் பலரும் ஆரோக்கியமாக பார்த்து வருகிறார்கள். பெரிய நடிகர்களின் படங்கள் வருடத்தின் எந்த தேதியில் ரிலீஸ் ஆனாலும், அந்த தேதியில் படத்தை அவர்களின் ரசிகர்கள் வந்து பார்ப்பார்கள். அப்படி இருக்கும்போது, தீபாவளி போன்ற திருவிழா காலத்தில் இளம் நடிகர்களின் படங்கள் வெளியாகி உள்ளது என்பது, வரவேற்கத்தக்கது. இந்நிலையில் நேற்று வெளியான பைசன், டியூட் மற்றும் டீசல் படங்களின் முதல் நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த முதல் நாள் ஒப்பீட்டு பந்தயத்தில் முதல் இடத்தில் இருப்பது பாக்ஸ் ஆபீஸ் மன்னன் பிரதீப் ரங்கநாதனின் படமான டியூட் படம் தான். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது. மேலும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே நேரடியாக படத்தை ரிலீஸ் செய்தது.

Diwali 2025 Release Tamil Movies Bison Vs Dude Vs Diesel Box Office Day 1 Comparison

டியூட் வசூல்: இந்நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா என மூன்று மாநிலங்களிலும் அளவீட்டில் இந்த படத்திற்கு அதிகப்படியான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டன. படம் பார்த்த ரசிகர்களும் படம் செம ஜாலியாக, ஃபன்னாக செம எண்டர்டைனராக இருக்கிறது என்றும், படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து வரவேற்கத்தக்கது என்றும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் இந்த படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விட்டதாக சாக்.நிக் வலைதளம் தெரிவித்துள்ளது.

பைசன் வசூல்: அடுத்த இடத்தில் இருப்பது துருவ் விக்ரமின் பைசன் - காளமாடன் படம் தான். இந்த படத்தை பொறுத்தவரையில், படம் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேஷனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. படத்தை மாரி செல்வராஜ் இயக்க, பா. ரஞ்சித்தின் நீலம் மற்றும் அப்லாஸ் நிறுவனம் சேர்ந்து படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு தேசிய விருதுகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். மேலும் படத்தில் மாரி செல்வராஜ் பேசியுள்ள அரசியல் என்பது சமூகத்திற்கு தேவையான அரசியலாக உள்ளது. படம் முழுக்க வெட்டு குத்து இருந்தாலும், கபடி காட்சிகள், தென் மாவட்ட மக்களின் வாழ்வியல், காதல் காட்சிகள் என அனைத்தும் ரசனையின் உச்சம். இந்த படம் முதல் நாளில் ரூபாய் 2.5 கோடிகள் இந்தியா முழுவதும் வசூலித்துள்ளது என்று சாக்.நிக் வலைதளம் தெரிவித்துள்ளது.

Diwali 2025 Release Tamil Movies Bison Vs Dude Vs Diesel Box Office Day 1 Comparison

டீசல் வசூல்: மூன்றாவது இடத்தில் உள்ள படம் ஹரீஷ் கல்யாணின் டீசல் தான். இந்த படத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்த காட்சிகளும் தியேட்டர்களும் மிகக் குறைவே. அதாவது முந்தைய இரண்டு படங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு. ஆனால் படம் பார்த்தவர்கள் படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், சர்தார் படத்தில் எப்படி தண்ணீர் மாஃபியாக்கள் குறித்து பேசப்பட்டதோ, அதேபோல் இந்த படத்தில் டீசல் மாஃபியாக்கள் குறித்து, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் பேசப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூபாய் 25 லட்சங்கள் வசூலித்துள்ளது என்று சாக்.சிக் வலைதளம் தெரிவித்துள்ளது. இந்த மூன்று படங்களும் எதிர்வரும் நாட்களிலும் அதிகப்படியான வசூல்களைக் குவிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X