»   »  தீபாவளி ரேஸ்: கமல் மற்றும் அஜீத்துடன் கோதாவில் குதிக்கும்... தனுஷ்

தீபாவளி ரேஸ்: கமல் மற்றும் அஜீத்துடன் கோதாவில் குதிக்கும்... தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வருடம் தீபாவளியன்று அஜீத் நடித்து வரும் தல 56 படத்துடன் கமலின் தூங்காவனம் மற்றும் தனுஷின் வேலை இல்லாப் பட்டதாரி 2 போன்ற படங்களும் வெளியாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அஜீத்தின் படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து விட்டனர், இந்நிலையில் கமலின் தூங்காவனம் முழுவதும் முடிந்து விட்டதால் படத்தை தீபாவளி தினத்தில் வெளியிட கமல் முடிவு செய்து இருக்கிறார்.


கமல் மற்றும் அஜீத் படங்களுடன் தனுஷின் வேலை இல்லாப் பட்டதாரி 2 படமும் மோதவிருப்பதால் தீபாவளி ரேஸ் இப்பொழுதே கோடம்பாக்கத்தில் களை கட்டத் தொடங்கியிருக்கிறது.


3 படங்களிலும் நடித்தவர்கள் மற்றும் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.


தூங்காவனம்

தூங்காவனம்

பாபநாசம் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கமலின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தூங்காவனம். கமலுடன் இணைந்து த்ரிஷா, ஆஷா சரத், பிரகாஷ் ராஜ் மற்றும் கிஷோர் ஆகியோர் படத்தில் நடித்திருக்கின்றனர்.
பிரெஞ்சு படத்தின் தழுவல்

பிரெஞ்சு படத்தின் தழுவல்

ஸ்லீப்லெஸ் நைட் என்ற பிரெஞ்சுப் படத்தின் தழுவலாக உருவாக்கப்பட்டிருக்கும் தூங்காவனம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது. கமலின் நீண்ட நாள் உதவியாளர் ராஜேஷ் எம் செல்வா படத்தை இயக்கியிருக்கிறார்.
சைக்கோ த்ரில்லர்

சைக்கோ த்ரில்லர்

சைக்கோ த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கும் இப்படம் 1 மணி நேரம் 38 நிமிடங்கள் என்ற குறைந்த காலமே ஓடக்கூடியது. மிகக்குறுகிய காலத்தில் படம் பிடிக்கப்பட்டிருக்கும் தூங்காவனம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


தல 56

தல 56

அஜீத், சுருதிஹாசன், லட்சுமிமேனன், சூரி ஆகியோர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிவரும் தல 56 படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. படம் ஆரம்பித்த போதே தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து விட்டனர்.


சஸ்பென்ஸ்

சஸ்பென்ஸ்

கதைப்படி அஜீத் தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது, வேறு எந்தத் தகவல்களையும் வெளியிடாமல் மிகவும் ரகசியமாகப் பாதுகாத்து வருகின்றனர் படக்குழுவினர். தீபாவளி தினத்தில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில தினங்களில் முடிவடையவிருக்கின்றது, எனினும் இன்னும் படத்தின் தலைப்பை இறுதி செய்யாமலேயே இருக்கின்றனர் படக்குழுவினர். படம் பாட்ஷா பாணியில் இருக்கும் என்று ஒரு வதந்தி கிளம்பியிருப்பதால் படத்தின் மீது எக்கசக்கமான எதிர்பார்ப்பு கொட்டிக் கிடக்கிறது கோடம்பாக்கத்தில்.


வேலை இல்லாப் பட்டதாரி 2

வேலை இல்லாப் பட்டதாரி 2

கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற வேலை இல்லாப் பட்டதாரி படத்தின் 2 ம் பாகமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த தனுஷ் தவிர மற்ற அனைவருமே புதிதாக இப்படத்தின் மூலம் இணைந்திருக்கின்றனர். தனுஷ் ஜோடியாக சமந்தா, ஏமி ஜாக்சன் இருவரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.


மாறிய பெற்றோர்

மாறிய பெற்றோர்

முதல் பாகத்தில் அப்பா அம்மாவாக நடித்திருந்த சமுத்திரக்கனி - சரண்யா இருவருக்கும் பதிலாக இந்தப் படத்தில் தனுஷின் பெற்றோராக கே.எஸ்.ரவிக்குமார் - ராதிகா இருவரும் நடித்திருக்கின்றனர். முதல் பாகத்தின் வெற்றியால் 2 வது பாகமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கிறது.


3 படங்களுடன்

3 படங்களுடன்

மேலே சொன்ன 3 படங்கள் தவிர்த்து கார்த்திக் சுப்புராஜின் இறைவி மற்றும் வேறு சில படங்களும் தீபாவளி கோதாவில் குதிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் உறுதியான தகவல்கள் வரும் வரை நாம் எதுவும் சொல்ல முடியாது என்பதால் வழக்கம் போல காத்திருக்கலாம்.


தீபாவளி ரேஸ் ரொம்ப டப்பா இருக்கே...English summary
Diwali Battle: 'Thala 56' vs 'Thoongaa Vanam' vs 'VIP 2'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil