Diwali Release: சிவகார்த்திகேயனை பதம் பார்க்க காத்திருக்கும் தனுஷ்... கார்த்தியுடன் மீண்டும் மோதல்!

சென்னை: 2023 பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வெளியாகின.

இதனையடுத்து இந்தாண்டு தீபாவளிக்கு எந்தெந்த படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அதன்படி தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் மூவரும் தான் தீபாவளி ரேஸில் களமிறங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இவர்களில் சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 Diwali Release: Captain Miller, Japan, Ayalaan films to release on Diwali 2023

2023 தீபாவளி ரிலீஸ்: 2023 பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் வாரிசு, அஜித் நடித்த துணிவு திரைப்படங்கள் ரிலீஸாகின. இந்த இரண்டு படங்களுமே 300 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சம்மர் ஸ்பெஷலாக பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாகவுள்ளது, அதன் தொடர்ச்சியாக ஆயுத பூஜைக்கு விஜய்யின் லியோ ரிலீஸாகிறது. இந்த வரிசையில் தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன்படி, தனுஷின் கேப்டன் மில்லர் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த மாதம் வெளியான தனுஷின் வாத்தி, 100 கோடி வசூலித்தது. இதனால், கேப்டன் மில்லர் படத்தை தீபாவளிக்கு களமிறக்க தனுஷ் முடிவு செய்துள்ளாராம். அதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் தரமான கலெக்‌ஷன் கிடைக்கும் என்பதே தனுஷின் திட்டமாக உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

 Diwali Release: Captain Miller, Japan, Ayalaan films to release on Diwali 2023

இந்த வரிசையில், கார்த்தியின் 'ஜப்பான்' திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜூ முருகன் இயக்கத்தில் ரொம்பவே சைலண்டாக உருவாகி வரும் ஜப்பான், கார்த்தியின் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்தாண்டு விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என கலக்கிய கார்த்தி, இந்தாண்டு பொன்னியின் செல்வன் 2, ஜப்பான் படங்கள் மூலம் ரசிகர்களை மிரட்ட காத்திருக்கிறார்.

அதேபோல், சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 4 ஆண்டுகள் முன்பே தொடங்கப்பட அயலான், இன்னும் ரிலீஸாகாமல் தண்ணி காட்டி வருகிறது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன், கிராபிக்‌ஸ் வேலைகள் பிஸியாக நடந்து வருகின்றன. அதனால், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Diwali Release: Captain Miller, Japan, Ayalaan films to release on Diwali 2023

அதன்படி, இதுவரை கேப்டன் மில்லர், ஜப்பான், அயலான் படங்கள் இந்தாண்டு தீபாவளி ரிலீஸூக்கு காத்திருக்கின்றன. சிவகார்த்திகேயனின் ஆரம்ப காலத்தில் அவருக்கு வாய்ப்புகள் கொடுத்தது தனுஷ் தான். ஆனால், இப்போது இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாததால், தனுஷ் - சிவகார்த்திகேயன் மோதல், பாக்ஸ் ஆபிஸில் சுவாரஸ்யமாக இருக்கும் எனலாம்.

அதேபோல், 2022 தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தி நடித்த சர்தார் படங்கள் ரிலீஸாகின. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் தோல்வியை தழுவியது. அதேநேரம் எதிர்பார்ப்பே இல்லாமல் ரிலீஸான சர்தார் 100 கோடி வசூலித்தது. இதனால் 2023 தீபாவளியிலும் சிவகார்த்திகேயன் - கார்த்தி இருவரும் மோதிப் பார்க்க ரெடியாகிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் யார் கிங் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X