Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தீபாவளி ஸ்பெஷல் படங்கள்... தியேட்டர் புக்கிங்... இன்றைய நிலவரம்!
தீபாவளிக்கு சரியாக இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. இன்றைய நிலவரப்படி 2 தமிழ்ப் படங்களின் வெளியீடுதான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த இரு படங்களைத் தவிர, இந்தியில் ஷாரூக்கான் நடித்துள்ள மெகா படமான ஹேப்பி நியூ இயர் வெளியாகவிருக்கிறது.
தீபாவளிக்கு வெளியாகும் தமிழ்ப் படங்கள் எவை என்று புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. பூஜையும் கத்தியும்தான் அவை. இவற்றில் நடித்தவர்கள், இயக்கியவர்கள் விவரங்களெல்லாம் ஒன்இந்தியா ரசிகர்களுக்கு அத்துப்படி ஆகியிருக்கும். எனவே ரிலீசாகும் தியேட்டர்கள் பற்றிப் பார்க்கலாம்.
பூஜை
படம் தொடங்கிய நாளன்றே, தீபாவளி வெளியீடு என விளம்பரம் செய்த மகா தன்னம்பிக்கை ஹீரோ விஷாலின் மூன்றாவது சொந்தப் படம் இது. மொத்தம் 350 அரங்குகளில் வெளியாகிறது. இன்னும் இருபத்தைந்து அரங்குகளை கூடுதலாக குறிவைத்திருக்கிறார்கள். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் கிட்டத்தட்ட 500 அரங்குகளில் வெளியாகிறது இந்தப் படம். ஆந்திராவில் கணிசமான எண்ணிக்கையில் அரங்குகளை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
கத்தி
கடும் எதிர்ப்பார்ப்பு, எதிர்ப்பு, சர்ச்சைகளுக்கிடையில் வெளியாகிறது விஜய்யின் கத்தி. இந்தப் படமும் தீபாவளி ரிலீஸ் முடிவிலிருந்து கடைசி வரை பின்ன வாங்கவில்லை. தமிழகத்தில் 400 அரங்குகள், வெளியில் 600 அரங்குகள் என்பது தயாரிப்பாளரின் திட்டம்.
அய்ங்கரனுக்கு அது ஒரு பிரச்சினையில்லை...
வெளிநாடுகளில் 600 அரங்குகள் பிடிப்பது லைகா மற்றும் அய்ங்கரனுக்கு பெரிய விஷயமே இல்லை. அவ்வளவு திரையரங்குகள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் தமிழகத்தில் இந்தப் படத்தை வெளியிடும் அரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வோம் என தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பும், மாணவர் அமைப்புகளும் அறிவித்துள்ளன. அதை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
ஹேப்பி நியூ இயர்
ஷாரூக்கானின் மெகா தீபாவளி ரிலீஸ் ஹேப்பி நியூ இயர். கிட்டத்தட்ட ஒரு நேரடி தமிழ்ப் படம் போலவே 100-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது இந்தப் படம். இந்தியில் மட்டுமல்லாது, தமிழில் டப் செய்யப்பட்டும் வெளியாகிறது. ஷாரூக்கானுக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் தமிழகத்தில் உள்ளதை அவரது சென்னை எக்ஸ்பிரஸ் நிரூபித்தது. தென்னகத்தில் ஹேப்பி நியூ இயரும் பெரிதாக வசூலில் கலக்கும் என்று தெரிகிறது.
கடைசி நேரத்தில் பூலோகம்...?
ஜெயம் ரவி - த்ரிஷா நடித்த பூலோகம் படம் கடைசி நேரத்தில் வெளியாகும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. தியேட்டர் பிடிப்பதில் ஆஸ்கார் ரவிச்சந்திரனும் மும்முரம் காட்டினார். ஆனால் இப்போது அமைதியாக இருக்கிறது ஆஸ்கார் வட்டாரம்!
அடுத்த ஒரு வாரத்துக்குள் பெரிய மாற்றமிருக்காது என்பதால்... இதுதான் தீபாவளி ரிலீஸ் நிலவரம்!
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?