twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஜித் வந்தாதான் எங்களுக்கு தீபாவளி.. சம்பவ இடத்திற்கு சென்று நடிகர் விமல் உருக்கம்!

    |

    Recommended Video

    சம்பவ இடத்திற்கு சென்று நடிகர் விமல் உருக்கம்!

    திருச்சி: குழந்தை சுஜித் மீட்கப்பட்டால்தான் தங்களுக்கு தீபாவளி என நடிகர் விமல் தெரிவித்துள்ளார்.

    திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் இரண்டு மகன் சுஜித் வில்சன். நேற்று முன்தினம் மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது தோட்டத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

    நேற்று முன்தினம் முதல் குழந்தையை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் பயனளிக்கவில்லை.

    இரவு பகலாய்

    இரவு பகலாய்

    இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று நவீன எந்திரங்களுடன் குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் ஆழ்துளை கிணற்றின் அருகே இரவு பகலாய் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    சிறப்பு வழிபாடு

    சிறப்பு வழிபாடு

    குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என தமிழக மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளி வாசல்களில் சுஜித் நல்ல முறையில் மீட்கப்பட வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    நடிகர் விமல்

    நடிகர் விமல்

    பிரபலங்கள் பலரும் சிறுவன் சுஜித்துக்காக பிரார்த்தனை செய்வோம் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் பனங்கொம்பு பகுதியை பூர்விகமாக கொண்ட நடிகர் விமல், இன்று சம்பவ இடத்திற்கு சென்றார்.

    சுஜித் வந்தால்தான்

    சுஜித் வந்தால்தான்

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் ஊரில் தீபாவளியைக் கொண்டாடவில்லை, குழந்தை சுஜித் மீண்டு வர வேண்டும் என்பதுதான் எங்கள் எல்லோரது பிரார்த்தனையாகவும் உள்ளது.

    தூங்காமல் போராட்டம்

    தூங்காமல் போராட்டம்

    கண்டிப்பாக, அதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள் தூங்காமல் இரவுபகலாக போராடி வருகின்றனர். கண்டிப்பாக இந்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    அண்டை வீட்டு குழந்தைகள்

    அண்டை வீட்டு குழந்தைகள்

    நான் முதல் நாள் இரவிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். பணியாற்றுபவர்கள் யாருமே ஒரு நிமிடம் கூட வேஸ்ட் செய்யவில்லை. ஆழ்துளை கிணறு என்றால் நம்ம வீட்டு குழந்தைகள் மட்டுமல்ல அண்டை வீட்டிலும் குழந்தைகள் இருக்கும்.

    மூட வேண்டும்

    மூட வேண்டும்

    ஆழ்துளை கிணறு தோண்டி அது தோல்வியடைந்து விட்டால் அதை எப்படி சரியாக மூட வேண்டும் என்பதையும் துளை போடுகிறவர்களே அதை சரியா மூடுவதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு விமல் கூறினார்.

    English summary
    Actor Vimal had gone to Nadukkattuppati where the child fell down in the borewell. Vimal said Diwali would be there for us if the child Sujith is rescued.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X