பா. ரஞ்சித் செய்த அந்த ஒரு வேலை.. சுட்டிக்காட்டி பேசிய DJ பிளாக்.. இவ்வளவு நடந்திருக்கு பாருங்களேன்

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், தமிழ் பண்பாட்டு தளத்தில் சிறப்பாகவும் வீரியத்துடனும் இயக்கி வரும் ஒரு இயக்கவாதி என்றே குறிப்பிடலாம். இவரது நீலம் பண்பாட்டு மையம் தமிழ் சூழலுக்கு பலரை அடையாளம் காட்டியுள்ளது. இது மட்டும் இவரது படங்கள் பேசும் அரசியல் என்பது, தொடர்ந்து சமூகத்தில் விவாதத்தை உருவாக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. இப்படி இருக்கும்போது இவரது நீலம் பண்பாட்டு மையம் நடத்தி வரும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல DJ பிளாக் பேசியது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 6ஆம் ஆண்டு மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் அதாவது டிசம்பர் 26ஆம் தேதி வெகு சிறப்பாக தொடங்கியது. இயக்குநர் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், மக்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பறை இசைத்து வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

DJ Black Opens About How Director Pa Ranjith Madras Movie Creates Impact His Life At Margazhiyil Makkalisai 2025
Photo Credit:

பா. ரஞ்சித்: மார்கழியில் மக்களிசை என்பது, தமிழ்நாட்டில் மாற்று அரசியலை பேசுகிற மிகவும் முக்கியமான மேடை. அதற்கு தோல் கொடுப்பது தான் சரியானது என்று பேசினார் வெற்றி மாறன். அதேபோல், மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசுகையில், நமது பல கலைகளை நம்மிடம் இருந்து பிடுங்கி விட்டார்கள். அதை மீண்டும் நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்படி மீட்டு எடுக்கும் ஒரு நிகழ்வுதான் இந்த மார்கழியில் மக்களிசை என்று பேசினார்.

DJ பிளாக்: இப்படி இருக்கும்போது, நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான நேற்று கலந்து கொண்ட பிரபல DJ பிளாக் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. அதாவது, " எனது பெயர் DJ பிளாக். எனது ஊர், புளியந்தோப்பு, கன்னிகா புரம். நான் உலகின் எந்த பகுதிக்குச் சென்றாலும் இதைச் குறிப்பிட்டுச் சொல்லி விட்டுத்தான் பேசவே தொடங்குவேன். அதற்கு காரணம், இயக்குநர் பா. ரஞ்சித் அண்ணன் இயக்கிய மெட்ராஸ் படம் தான். மெட்ராஸ் படம் மட்டும் அவர் எடுக்கவில்லை என்றால், எனக்கு இவ்வளவு தைரியம் வந்திருக்காது. முன்பு எல்லாம் நமது ஏரியாவுக்கு வர மாட்டார்கள், ஆனால் இன்றைக்கு வெளி நண்பர்கள் வருகிறார்கள், நமது உணவை சாப்பிடுகிறார்கள்" என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X