கிரிக்கெட் வீரர் தந்த அன்பு பரிசு… நெகிழ்ச்சியில் கமல்ஹாசன்
Recommended Video
சென்னை : கமல்ஹாசனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் கிரிக்கெட் வீரர் பிராவோ. டீஜே பிராவோ என்ற பெயர் பொறிக்கபட்ட சட்டையையும் பரிசாக அளித்துள்ளார். அதில் கமலஹாசனுக்கு வாழ்த்துக்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் டீஜே பிராவோவை தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவ்வளவு பிடிக்கும், அந்த அளவுக்கு இவர் சென்னை அணிக்காக ஐபிஎல்லில் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தி இருந்தார். இவரின் விளையாட்டு திறமையை தாண்டி இவரின் நடன அசைவுகளால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர்.

கிரிக்கெட்டை தாண்டி நன்றாக பாடும் திறமையும் இவருக்கு உண்டு தமிழில் "சித்தரம் பேசுதடி 2'' படத்தில் 'யேன் டா' என்ற பாடலை தமிழில் பாடியிருக்கிறார். இவருக்காகவே அந்த பாடல் மிக பெரிய வெற்றி அடைந்தது
தற்போது டீஜே பிராவோவுக்கு யூத் ஜகான் ஆப் த இயர் விருது பிகைன்ட்வுட்ஸ் நிறுவனத்தால் வழங்கபட்டது. இந்த விருதை பெறுவதற்காக சென்னை வந்த அவர், மரியாதை நிமித்தமாக கமலை சந்தித்தார்.

அப்போது, டீஜே பிராவோ என்று பெயர் பொறிக்கபட்ட சட்டையை பரிசாக அளித்தார். அதில் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் என்று கூறி தனது கையொப்பத்தையும் பதித்து கொடுத்திருக்கிறார் டீஜே பிராவோ. இந்த தகவலை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அவர்களது சமூக வளைதல பக்கங்களில் தெரிவிக்கபட்டது.
நவம்பர் மாதம் கமல்ஹாசனுக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார். அவர் விரைவில் நலம் பெற அவரது ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











