உடம்பு முழுக்க சரவெடி.. கொளுத்திப் போட்டு ஸ்டைலா போஸ் கொடுத்த பெண் டிஜே.. ஏஐ இன்னும் என்னலாம் பண்ணுமோ?
மும்பை: ஏஐ உதவியுடன் ரஜினிகாந்த் முதல் விஜய் வரை ஏகப்பட்ட நட்சத்திரங்கள் ஒன்றாக டீ கடைக்கு சென்று டீ அருந்துவது, விஜய் முதலமைச்சராக மாறுவது என பல எடிட் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றன. சில வீடியோக்களையும் இப்படி ஏஐ உதவியுடன் எடிட் செய்து வெளியிட்டு வருகின்றனர்.
மும்பையை சேர்ந்த பிரபல பெண் டிஜே ஷெர்ரி சோனி உர்ஃபி ஜாவேத்தை ஓவர்டேக் செய்யும் விதமாக வித விதமான உடைகளை ஏஐ உதவியுடன் உருவாக்கி அவரே அணிந்திருப்பது போல வீடியோக்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

கடந்த மாதம் வெளியான அவரது ஒரு வீடியோ இணையத்தை அதிர வைத்துள்ளது. இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்தில், டிஜே ஷெர்ரி சோனி டிஸ்கோ விளக்குகள், லேசர் ஒளி, புகை மூட்டத்திற்கு மத்தியில் துடிப்பான இசையை இசைக்கிறார். இந்த விசித்திரமான காட்சி நெட்டிசன்களை திகைப்படையச் செய்தது. பின்னர் தான் அது ஏஐ வீடியோ என தெரியவந்தது.

சரவெடி டிரெஸ்: உடல் முழுவதும் நாய்க்குட்டிகள் இருப்பது போலவும், பூனைக்குட்டிகள் இருப்பது போலவும் ஏகப்பட்ட ஏஐ எடிட் செய்து விளையாடி வருகிறார் ஷெர்ரி சோனி. இந்நிலையில், உடல் முழுக்க சரவெடி பட்டாசுகளால் ஆன உடையை உடுத்தியிருப்பது போலவும் அது அழகாக வெடித்து சிதறுவது போன்ற ஏஐ எடிட் வீடியோவை தற்போது வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
யாரு இந்த ஷெர்ரி சோனி?: ஷெர்ரி சோனி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக டிஜேவாக பணியாற்றி வருகிறார். இந்தூரில் டிஜேவாகப் பணிபுரிந்த சோனி, தனது இசையை தனித்துவமாக மாற்றுவதற்கு, பரிசோதனை முயற்சிகள் செய்து வருகிறார். இசைத் துறையை தாண்டி தற்போது ஏஐ மாடலிங் முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஷெர்ரி சோனிக்கு அவரது வீடியோக்கள் மூலமாக ஏகப்பட்ட ஃபாலோயர்கள் குவிந்து வருகின்றனர்.
உர்ஃபி ஜாவேத்துக்கு போட்டி: வித விதமான கவர்ச்சி உடைகளை உடுத்தி உர்ஃபி ஜாவேத் பாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலமான நிலையில், அதே பாணியை ஆடைகளை கஷ்டப்பட்டு வடிவமைக்காமல் ஏஐ மூலமாகவே உருவாக்கிய வீடியோக்களை வெளியிட்டே வைரலாகி வருகிறார் ஷெர்ரி சோனி.


Click it and Unblock the Notifications











