twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லோரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க...தமிழகத்திற்கு வருகிறான் 'ஆஸ்கர் நாயகன்'!

    |

    சென்னை: ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் படம் 'ஜாங்கோ அன்செய்ன்ட்' தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

    சென்ற மாதம் 24ம் தேதி , 85 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 5 விருதுகளை வாங்கிய திரைப்படம் ஜாங்கோ அன்செய்ன்ட்.

    அமரிக்காவில் கருப்பர் இன மக்கள் பட்ட துன்பங்களையும் துயரங்களையும் படம் பிடித்து காட்டுகிறது இப்படம். கருப்பின மக்களின் போராட்டங்களையும், அடிமைத்தனத்தையும் பற்றி கூறுகிறார் இயக்குநர்.

    5 ஆஸ்கர் விருதுகள்

    5 ஆஸ்கர் விருதுகள்

    சிறந்த படம், திரைக்கதை, துணை நடிகர் உள்பட 5 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்ற படம் ஜாங்கோ அன்செய்ன்ட்.

    பாரின் பாலா...

    பாரின் பாலா...

    க்யன்டின் டேரன்டினோ திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார்.(பாலா சார் நீங்களும் இந்த டைப் படம் தான எடுக்குறீங்க)

    கருப்பு அடிமைகளின் கதை...

    கருப்பு அடிமைகளின் கதை...

    18ம் நூற்றாண்டில் நடப்பதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளது. இரக்கமே இல்லாத ஒரு கும்பலிடம் மனிதர்கள் அடிமைகளாக விற்கப்படுகின்றனர். அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம்.

    மனைவியை மீட்பது எப்படி

    மனைவியை மீட்பது எப்படி

    அதுபோல் விற்கப்படும் அடிமைகளில் ஒருவன் தன் மனைவியை எப்படி மீட்கிறான். அவனுக்கு ஜெர்மனியிலிருந்து ஒரு டாக்டர் எப்படி உதவுகிறார் என்பதே கதை.

    ஹீரோ... ஹீரோயின்...

    ஹீரோ... ஹீரோயின்...

    ஜாங்கோ கதாபாத்திரத்தில் ஜேமி ஃபாக்ஸ் நடித்திருக்கிறார். இவருடன் லியானார்டோ டி கேப்ரியோ, கெர்ரி வாஷிங்டன், கிறிஸ்டாப் வால்டஸ் நடித்திருக்கிறார்கள். அடிமையை மீட்க உதவும் ஜெர்மன்காரராக கிறிஸ்டாப் வால்ட்ஸ் நடித்துள்ளார்.

    வாரிக்குவித்த வசூல்

    வாரிக்குவித்த வசூல்

    வணிக ரீதியில் 365 மில்லியன் டாலர்களை குவித்தது ஜாங்கோ அன்செய்ன்டு .

    கோல்டன் க்ளோப் விருதும்...

    கோல்டன் க்ளோப் விருதும்...

    இதேபடம் சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் க்ளோப் விருதும் பெற்றது.

    தமிழ் பேச தயார்...

    தமிழ் பேச தயார்...

    இப்படம் விரைவில் இந்தியாவில் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

    English summary
    Quentin Tarantino completed a clean sweep of the major awards by walking off with the best original screenplay Oscar for Django Unchained at the 85th Academy Awards in LA, following his triumphs in the same categories at the Golden Globes and Baftas. Django Unchained will be made in tamil soon. Summary of this film was The pre-Civil War deep south. An escaped slave returns to the plantation where he was kept captive to free his wife.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X