twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆடுஜீவிதம் டீம் போல..ஆப்ரிக்காவில் சிக்கித்தவித்த இன்னொரு படக்குழு.. சிறப்பு விமானத்தில் ரிட்டர்ன்!

    By
    |

    கொச்சி: ஆப்பிரிக்காவில் சிக்கித் தவித்த படக்குழுவினர் சிறப்பு விமானம் மூலம் இந்தியா திரும்பியுள்ளனர்.

    பிருத்விராஜ் நடிக்கும் ஆடுஜீவிதம் மலையாள படக் குழுவினர் படப்பிடிப்புக்காக ஜோர்டான் நாட்டுக்குச் சென்றிருந்த நிலையில் கொரோனா பிரச்னை தீவிரமடைந்தது.

    இதனால், அவர்கள் அங்கு சிக்கிக்கொண்டனர். சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், சுமார் 58 பேர் கொண்ட படக்குழுவினர் இந்தியா திரும்ப முடியாமல் தவித்தனர்.

    வெறும் 4 உடைகளுடன் 2 மாதமாக வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் ஹீரோயின்.. உடனே இந்தியா திரும்ப ஆவல்! வெறும் 4 உடைகளுடன் 2 மாதமாக வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் ஹீரோயின்.. உடனே இந்தியா திரும்ப ஆவல்!

    பிருத்விராஜ்

    பிருத்விராஜ்

    பின்னர் சிறப்பு விமானம் மூலம் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் திரும்பினர். கொச்சி திரும்பிய நடிகர் பிருத்விராஜ், இயக்குனர் பிளஸ்சி உட்பட 58 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர்கள் 7 நாட்களுக்குப் பிறகு வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதுபற்றி பிருத்விராஜ் சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    டிஜிபூட்டி

    டிஜிபூட்டி

    இந்நிலையில், இவர்களைப் போல இன்னொரு மலையாளப் படக்குழு, ஆப்ரிக்காவில் சிக்கிக்கொண்டது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மலையாளப் படம் டிஜிபூட்டி. இதை, உப்பும் மிளகும் படத்தை இயக்கிய எஸ்.ஜே.சினு இயக்குகிறார். இதன் படப்பிடிப்பிடிப்புக்காக, 70 பேர் கொண்ட குழுவினர் ஆப்பிரிக்காவில் உள்ள டிஜிபூட்டி என்ற சிறிய நாட்டுக்கு மார்ச் 5 ஆம் தேதி சென்றனர்.

    உண்மை சம்பவம்

    உண்மை சம்பவம்

    இந்தப் படத்தை, டிஜிபூட்டி நாட்டில் செட்டிலாகி இருக்கும், ஜோபி பி சாம் என்பவரும் அவர் மனைவியும் தயாரிக்கின்றனர். அந்த நாட்டின் அரசும் இந்தியாவும் இணைந்து தயாரிக்கும் முதல் படம் இது. இந்த இடத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை மையமாக வைத்துதான் இந்தப் படம் தயாராகிறது. அதனால் படத்துக்கு அந்த நாட்டின் பெயரையே டைட்டிலாக வைத்துள்ளனர்.

    உடனடியாக

    உடனடியாக

    அந்த நாட்டிலேயே படப்பிடிப்பை, நடத்தினால் கதைக்கு நம்பகத்தன்மை இருக்கும் என்று கருதியதால் அவர்கள் அங்கு சென்றனர். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதுதான் கொரோனா தீவிரம் அடைந்தது. படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதியே முடிந்தது. 21 ஆம் தேதி அவர்கள் நாடு திரும்ப திட்டமிட்டிருந்தனர். லாக்டவுன் காரணமாக, சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், உடனடியாக நாடு திரும்ப முடியவில்லை.

    விசா காலம்

    விசா காலம்

    தயாரிப்பாளர் ஜோபி பி சாம், அவர்களுடைய சாப்பாட்டுச் செலவுகளை கவனித்துக் கொண்டார். இந்த படத்தின் இயக்குனர் எஸ்.ஜே.சினு, இங்கு மருத்துவ வசதிகள் இல்லை. எங்கள் குழுவில் 18 மாத குழந்தை முதல் 60 வயதை தாண்டிய முதியவர்கள் வரை இருக்கிறார்கள். எங்கள் விசாக்காலம் முடிந்துவிட்டது. இதனால் அரசு தலையிட்டு தனி விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்போது கோரிக்கை விடுத்திருந்தார்.

    சிறப்பு விமானம்

    சிறப்பு விமானம்

    இந்நிலையில், அவர்கள் அனைவரும் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் ஏற்பாடு செய்த சிறப்பு விமானம் மூலம், நேற்று மாலை கொச்சிக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த சிலரும் இந்தக் குழுவில் உள்ளனர். அவர்கள் விரைவில் சென்னை திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் திலீஷ் போத்தன், அமித் சக்கலக்கல், அஞ்சலி நாயர், அதிரா உட்பட பலர் நடிக்கின்றனர். தீபக் தேவ் இசை அமைக்கிறார்.

    English summary
    ‘Djibouti’ film crew stranded in Africa to return Kochi on Friday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X