twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காப்பாத்துங்க.. ஆப்ரிக்காவுக்கு ஷூட்டிங் போன 70 பேர்.. பெண்கள், குழந்தைகளுடன் சிக்கித் தவிப்பு

    |

    கேரளா: ஆப்பிரிக்காவின் திஜிபவுட்டி எனும் இடத்தில் ஷூட்டிங்குக்கு சென்ற மலையாள படக்குழுவினர் 70 பேர் லாக்டவுன் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.

    Recommended Video

    'தயவு செய்து செய்யுங்கள்!'-உருகிய நடிகர் ஆரி

    உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸுக்கு கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சுமார் 3 லட்சத்துக்கும் மேலானோர் கடந்த 3 மாதங்களில் இந்த கொடிய நோய்க்கு இரையாகி உள்ளனர்.

    அமலா பால் நடிப்பில் வெளியான அட்டகாசமான படங்கள்.. இதெல்லாம் கண்டிப்பா பார்த்தே ஆகனும்!அமலா பால் நடிப்பில் வெளியான அட்டகாசமான படங்கள்.. இதெல்லாம் கண்டிப்பா பார்த்தே ஆகனும்!

    உலகம் முழுவதும்

    உலகம் முழுவதும்

    கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவாமல் தடுக்க அனைத்து நாடுகளும் லாக்டவுனை கடுமையாக கடைபிடித்து வருகின்றன. சுற்றுலா சென்றவர்கள், மருத்துவத்திற்காக சென்றவர்கள், படிக்கச் சென்றவர்கள், வேலைக்குச் சென்றவர்கள் என பலரும் நாடு திரும்ப முடியாமல் லாக்டவுன் காரணமாக அகதிகளாக தவித்து வருகின்றனர்.

    பிருத்விராஜ் படக்குழு

    பிருத்விராஜ் படக்குழு

    மலையாள நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜின் ஆடு ஜீவிதம் படக்குழு ஜோர்டானில் லாக்டவுன் காரணமாக சுமார் 2 மாதங்களாக சிக்கித் தவித்து வருகின்றது. ஆனால், திட்டமிட்டபடி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நினைத்த காரியத்தை பிருத்விராஜ் படக்குழு ஷூட்டிங்கை அங்கு வெற்றிகரமாக முடித்துவிட்டதாக பிருத்விராஜ் டிவீட் செய்திருந்தார்.

    ஆப்ரிக்காவில் தவிப்பு

    ஆப்ரிக்காவில் தவிப்பு

    லாக்டவுன் அறிவிப்புக்கு முன்னதாக சினிமா ஷூட்டிங்கில் இடம்பிடித்த பலர் நாடு திரும்பிய நிலையில், பிருத்விராஜின் ஆடுஜீவிதம் படக்குழு எப்படி ஜோர்டானில் சிக்கியதோ, அதே போல Djibouti எனும் படக்குழு ஆப்பிரிக்காவில் சிக்கித் தவித்து வருகிறது. உப்பும் மிளகும் படத்தின் இயக்குநர் எஸ்.ஜே. சினு இயக்கத்தில் அந்த படம் உருவாகி வருகிறது.

    காலாவதியான விசா

    காலாவதியான விசா

    ஆப்பிரிக்காவின் Djibouti எனும் இடத்தை மையமாக வைத்து அதே பெயரில் உருவாகி வரும் அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்ற படக்குழுவினர் 70 பேர் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர். ஏப்ரல் 19ம் தேதியே படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், தற்போது அவர்களது விசாவும் காலாவதி ஆகிவிட்டது.

    18 மாத குழந்தையும்

    18 மாத குழந்தையும்

    18 மாத குழந்தை அந்த குழந்தையின் பெற்றோர், வயதான மூதாட்டி உள்ளிட்ட 70 பேர் அந்த நகரில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்திய அரசு தங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றும், தொழில் ரீதியாகவே இங்கே வந்ததாகவும், தற்போது நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதாகவும், விரைவில் அரசு காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என படக்குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    English summary
    For over a month now, the team of Djibouti which includes Amith Chakkalakkal, Dileesh Pothan, Gregory Jacob and director SJ Sinu are stranded in a villa complex in the African country of Djibouti.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X