Vijay: கேப்டன் நினைவு நாளுக்கு விஜய்க்கு அழைப்பு.. விஜயகாந்த் சிலையும் அன்பளிப்பு

சென்னை: கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு, அதாவது 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி மறைந்தார். அவரது மறைவு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். நாளை அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகின்றது. இந்நிலையில் நினைவு நாளில் கலந்து கொள்ள விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கேப்டன் விஜயகாந்த மறையும்போது தலைவராகவும் வரலாறாகவும் மாறிப்போனார். அவரது மறைவுக்கு கட்சி பேதமின்றி, சாதி பேதமின்றி, மத பேத மக்கள் லட்சக்கணக்கில் குவிந்து அஞ்சலி செலுத்தினர். யாருமே நினைத்துப் பார்க்காத அளவுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தலைநகர் சென்னையை நோக்கி படையெடுத்தனர்.

dmdk vijay vijayakanth

நடிகர், நடிகர் சங்கத் தலைவர், தேமுதிக கட்சித் தலைவர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் என தான் கால் பதித்த இடங்களில் எல்லாம், வேரூன்றி நின்றவர் கேப்டன். தமிழ்த் திரைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு, இலை போட்டு உணவு பரிமாறிமாறும் முறையை அறிமுகப்படுத்தியவர் கேப்டன் தான். ஒருவேளை சாப்பாட்டிற்காக யாரும் ஏங்கிவிடக்கூடாது என தனது படங்களின் படப்பிடிப்புத் தளங்கள், தனது இல்லங்கள், அலுவலகம் என அனைத்து இடங்களிலும் தனது சொந்த செலவில் உணவு போட்டவர்.

கேப்டன்: இந்தக் காரணத்திற்காகவே, கேப்டனை தமிழ்நாடு கொண்டாடும். சென்னை எந்த திசையில் இருக்கின்றது எனத் தெரியாமல் புறப்பட்டு வந்த பலர், விஜய்காந்த் போட்ட சாப்பாட்டினைச் சாப்பிட்டு, தனக்கான வாழ்வாதாரத்தை சென்னையில் அமைத்துக் கொண்டுள்ளனர். இளைஞர்கள், தொடர் தோல்விகளால் வருந்தும் தயாரிப்பாளர்கள், ஓரம் கட்டப்பட்ட இயக்குநர்கள் என பலருக்கு வாழ்க்கை கொடுத்தவர்.

dmdk vijay vijayakanth

அரசு மரியாதை: கேப்டன் வருகின்றார் என்றாலே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடுங்கும் அளவுக்கான பலத்தினை உருவாக்கியவர் கேப்டன். ஒவரது மறைவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

விஜய்க்கு அழைப்பு: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், விஜய் நடிகராக திரைத்துறையில் முதல் வெற்றியை விஜயகாந்த்துடன் இணைந்து நடித்துதான் பெற்றார். விஜயகாந்த் மறைவுக்கு அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய், விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்திவிட்டு, செல்லும்போது, மீண்டும் ஒரு முறை கேப்டன் முகத்தைப் பார்த்தார். இது தொடர்பான வீடியோக்கள் இப்போதும் இணையத்தில் உள்ளது. இந்தக் காட்சிகளைப் பார்த்து அழுதவர்கள் பலர். இப்படினா நிலையில், கேப்டனின் முதலாமாண்டு நினைவு நாளுக்கு, தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பின்போது விஜய்க்கு விஜயகாந்த் உருவச்சிலை வழங்கப்பட்டது. விஜய்யை கேப்டனின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் சதீஸ் ஆகியோர் தேமுதிக சார்பில் வரவேற்றனர்.

dmdk vijay vijayakanth

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X