twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று இல்லை...ரசிகர்கள் நிம்மதி

    |

    சென்னை : நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் மூச்சுதிணறல் காரணமாக நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    DMDK Leader Captain Vijayakanths COVID 19 test results out

    இதனால் விஜயகாந்த்தின் திரையுலக நண்பர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் கேப்டனுக்கு என்னாச்சு என கவலை அடைந்தனர். அவர் விரைவில் குணமடைய பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். விஜயகாந்த்திற்காக ட்விட்டரில் ஹாஷ்டேக் உருவாக்கி, அதனை டிரெண்டிங்கும் ஆக்கினர்.

    ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள்... ஆர்ஆர்ஆர் படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள்... ஆர்ஆர்ஆர் படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு

    இதற்கிடையில் தேமுதிக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த்திற்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் அவரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

    Recommended Video

    Vijayakanth நலமுடன் உள்ளார்.. விரைவில் வீடு திரும்புவார்.. DMDK அறிக்கை

    மேலும் விஜயகாந்த்தின் உடல்நிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயகாந்திற்கு மூச்சு திணறல் ஏற்பட்டதற்கு கொரோனா தொற்று காரணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    COVID 19 tests were taken for Vijayakanth and the results have shown negative
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X