திமுக - தேமுதிக கூட்டணி.. தலைமறைவான வடிவேலு?.. ப்ளூ சட்டை மாறனுக்கு நக்கலை பார்த்தீங்களா?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுகவும், தேமுதிகவும் கூட்டணி அமைத்திருக்கின்றன. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு பழம் நழுவி பாலில் விழுந்திருக்கிறது. நீண்ட வருடங்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்திருப்பதால் இரண்டு கட்சியினரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்தக் கூட்டணி அமைந்ததை அடுத்து ப்ளூ சட்டை மாறன் நடிகர் வடிவேலுவை கலாய்த்து ட்வீட் செய்திருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தல் அதிக கவனம் பெற்றிருக்கிறது. ஒருபக்கம் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து இந்தத் தேர்தலில் களம் காண்கிறார். சினிமாவில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாரோ அதேபோன்ற தாக்கத்தை அரசியலிலும் ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் அனைவரிடமும் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி கணக்குகள்: விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்து அவர் யாருடன் கூட்டணி வைப்பார் எனும் கேள்வி இருந்தது. திமுக மீது அதிருப்தியில் இருக்கும் கட்சிகள் எல்லாம் நிச்சயம் தவெகவுடனேயே கூட்டணி வைக்கும் என்றும் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் இப்போதுவரை அவரது கட்சியுடன் ஒரு கட்சியும் கூட்டணி வைக்கவில்லை. டிடிவி தினகரனின் அமமுக; அதிமுக - பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்க ஆரம்பித்துவிட்டது.

DMK DMDK Alliance After 10 Years Blue Sattai Maran s Vadivelu Tweet Creates Viral Storm
Photo Credit:

திமுக - தேமுதிக கூட்டணி: அதேபோல் தேமுதிக கட்சியும் தவெகவுடன் கூட்டணி வைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்கட்சியோ திமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டது. பழம் நழுவி பத்து வருடங்கள் கழித்து பாலில் விழுந்துவிட்டதில் இரண்டு கட்சியினரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இந்தக் கூட்டணி அமைந்ததிலிருந்து நடிகர் வடிவேலுவை சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

ட்ரோல் செய்த ப்ளூ சட்டை மாறன்: அந்தவகையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக. அதிர்ச்சி அடைந்த பிரபல காமடி நடிகர் தலைமறைவு" என குறிப்பிட்டிருக்கிறார். இதில் வடிவேலுவின் பெயரை அவர் குறிப்பிடாவிட்டாலும்; காமெடி நடிகர் என்று சொல்லியிருப்பதன் மூலம் வடிவேலுவைத்தான் அவர் கிண்டல் செய்திருப்பதாக பெரும்பாலானோரால் கருதப்படுகிறது.

விஜயகாந்த்துடன் மோதல்: முன்னதாக, கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேமுதிகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்திருந்தன. நடிகர் வடிவேலுவோ திமுகவுக்கு ஆதரவு கொடுத்து செல்லும் இடமெல்லாம் விஜயகாந்த்தையும், தேமுதிகவையும் கடுமையாக விமர்சனம் வைத்தார். அப்போதிருந்துதான் விஜயகாந்த்துடனான வடிவேலு மோதல் உச்சத்துக்கு சென்றது. தொடர்ந்து விஜயகாந்த்தை விமர்சித்ததால் அவர் உயிரிழந்தபோதுகூட வடிவேலுவால் வர முடியவில்லை. தற்போதும் திமுகவின் ஆதரவு நிலைப்பாட்டில் வடிவேலு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் திமுகவும், தேமுதிகவும் கூட்டணி அமைத்திருப்பதால்; கடந்த கால நினைவுகளை சோகத்துடன் அசைபோட்டிருப்பார் வடிவேலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X