Rajini: கடல் ஆழத்தை கண்டவனால் கூட ரஜினியின் ஆழத்தை காண முடியாது.. திமுக துரைமுருகன் சொன்னதை பாருங்க!

சென்னை: ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து பேசியதும் தான் பேசினார் ரஜினி ரசிகர்கள் விஜய்யின் தவெக, விஜய், ஆதவ் அர்ஜுனா என மொத்தமாக காட்டமான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். ரஜினியை திமுக மிரட்டியது, அதனால் தான் அவர் அரசியலுக்கு வரவில்லை. விஜய்க்கு எத்தனை நெருக்கடிகள் கொடுத்தாலும் அவர் அரசியலில் மக்களுக்காக நிற்கிறார் என்று தெரிவித்தார்.

இவரது இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் காட்டமாக பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில் ரஜினி ரசிகர்களின் விமர்சனத்திற்கு பல விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் குறிப்பாக சமூக வலைத்தளத்தில் மிகவும் மோசமான கமெண்ட்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். மேலும் ரஜினி ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று எல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசியல் களம் கடந்த 100 ஆண்டுகளாகவே திரைத்துறையுடன் தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது. திராவிடக் கருத்துக்களை மக்கள் மத்தியில் பாடல்களாக, நாடகங்களாக, சினிமாக்களாக தொடர்து பரப்பப்பட்டே வருகிறது. இப்படி இருக்கையில் தமிழ்நாடு அரசியல் களமும் தமிழ் திரைப்படத் துறையும் இணைந்தே உள்ளது.

DMK Durai Murugan s Old Remark on Rajinikanth Resurfaces Amid Clash Between Rajini Fans and Vijay Supporters

அரசியல் தாக்கம்: இப்படி இருக்கையில் நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார். அவரும் வருவதாக அறிவித்துவிட்டு, பின்னர் அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். ஆனாலும் ரஜினியின் தாக்கம் தமிழ்நாடு அரசியலில் தொடர்ந்து இருந்து வருகிறது.

திமுக துரைமுருகன்: ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்று முன்னதாக பேச்சுக்கள் எழுந்த போது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ரஜினி குறித்து கூறிய கருத்துக்களை ரஜினி ரசிகர்கள் இப்போது அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். அதாவது, ரஜினி இன்னும் அரசியலுக்கே வரவில்லை. அவர் வந்த பின்னர் யாருக்கு சவாலாக இருப்பார் என்பதை பார்த்துக் கொள்ளலாம்.

ஆழம்: கடல் ஆழத்தைக் கண்டவர்களால் கூட ரஜினியின் ஆழத்தைக் காண முடியாது. திமுகவுக்கு அவர் என்றும் எதிரி கிடையாது. இது மட்டுமல்லாமல் அவர் இன்னும் அரசியலுக்கே வரவில்லையே" என்று அப்போது தெரிவித்துள்ளார். துரைமுருகன் கூறியதை போலவே ரஜினி அரசியலுக்கு வரவில்லை, மேலும் தொடர்ந்து திமுகவுடன் நெருக்கமாகவே இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X