அஜித்தின் வலிமையை வாழ்த்திய கருணாநிதி...என்ன சொல்லிருக்கார் தெரியுமா ?
சென்னை : அஜித்தின் வலிமை படத்தை திமுக.,வை சேர்ந்த கருணாநிதி பாராட்டி உள்ளார். அவரின் இந்த வாழ்த்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அஜித் ரசிகர்கள் பலர் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அஜித் நடித்த வலிமை படம் இன்று பிரம்மாண்டமாக ரிலீசானது. அதிகாலை 4 மணிக்கு முதல் ஷோ திரையிடப்பட்ட போதிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திருவிழா போல் வலிமை ரிலீசை ரசிகர்கள் கொண்டாடினர். இதுவரை பாசிடிவ் விமர்சனங்களை வலிமை படம் பெற்றுள்ளது.

திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். திமுக கட்சியை சேர்ந்த கருணாநிதியும் வலிமை படத்தை வாழ்த்தி உள்ளார். கருணாநிதி என பெயரை பார்த்ததும், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி என நினைத்து விட வேண்டாம். வலிமை படத்தை பாராட்டி உள்ளது திமுக எம்எல்ஏ ஜெ.கருணாநிதி. இவர் சமீபத்தில் கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் தம்பி ஆவார்.
ஜெ.கருணாநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் கடின உழைப்பில் வெளியாகும் வலிமை திரபை்படம் வெற்றி பெற்றது. சாதனைகள் பல படைத்து, சிறந்த திரைப்பட வரிசையில் வலியதோற் இடம் பிடிக்க வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications